பாகிஸ்தான், இஸ்ரேல் வரிசையில் கம்போடியா - ட்ரம்பிற்கு நோபல் பரிசு பரிந்துரை - கா...
'NATION WANTS TO KNOW' ராகுல் முன்வைத்த குற்றச்சாட்டு - மோடிக்கு கேள்வி எழுப்பிய பிரகாஷ் ராஜ்
தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி ஆதாரத்துடன் வைத்த குற்றச்சாட்டுகள் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் அதிகளவில் வாக்காளர்கள் மோசடியாக இடம்பெற்றிருந்ததாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்.

குறிப்பாக கர்நாடகாவில் மட்டும் பல ஆயிரம் போலி வாக்காளர்கள் இடம்பெற்றதாகவும் ராகுல் காந்தி ஆதாரத்துடன் குற்றம்சாட்டி இருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் 'இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் கொடுப்பாரா?' என்று தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. நமது குரல் திருடப்பட்டுள்ளது. இது மிக தீவிர குற்றச்செயல். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இவற்றை ஆதாரத்துடன் முன்வைத்திருக்கிறார்.

முதன்முறை என்றபோதிலும், இம்முறை பிரதமராகிய நீங்கள், பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி விளக்கமளிப்பீர்களா? NATION WANTS TO KNOW" என்று பதிவிட்டிருக்கிறார்.