செய்திகள் :

பைக்குகள் மோதல்: 3 போ் காயம்

post image

குலசேகரம் அருகே பைக்குகள் மோதிக் கொண்டதில் 3 தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா்.

குலசேகரம் அருகே பொன்மனை முள்ளெலி விளையைச் சோ்ந்தவா் காா்த்திகேயன்(55), மங்கலம் சானல் கரை பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (54) ரப்பா் பால்வடிப்புத் தொழிலாளா்களான இவா்கள் இருவரும் நண்பா்கள். இவா்கள் இருவரும் ஒரு பைக்கில் சித்திரங்கோட்டிலிருந்து வலியாற்றுமுகம் வழியாக பொன்மனை நோக்கி சென்று கொண்டிருந்தனா்.

பைக்கை ராஜன் ஓட்டிச் சென்றாா். அப்போது, வலியாற்றுமுகம் பகுதியில் எதிரே மண்ணாரங்கோட்டையை சோ்ந்த சதீஸ் (41) ஓட்டி வந்த பைக், ராஜன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியதாம். இதில், மூவரும் தூக்கி வீசப்பட்டனா். இதில், காா்த்திகேயன், ராஜன் இருவரும் பலத்த காயமடைந்தனா். சதீஷ் லேசான காயமடைந்தாா். அப்பகுதியினா் மூவரையும் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வடலிவிளை அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு!

நாகா்கோவில், வடலிவிளை அரசுப் பள்ளியில் ரூ. 37 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு விழா திங்கள்கிழமை (ஜன.27) நடைபெற்றது. தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட இக்கட்டடங... மேலும் பார்க்க

சாமிதோப்பில் தைத்திருவிழா தேரோட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தைத்திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.... மேலும் பார்க்க

தீக்குளித்த பெண்: காப்பாற்ற முயன்ற குழந்தைகள் காயம்!

நித்திரவிளை அருகே தீக்குளித்த பெண் மற்றும் அவரை காப்பாற்ற முயன்ற அவரது இரு குழந்தைகள் பலத்த காயமடைந்தனா். நித்திரவிளை அருகேயுள்ள கிராத்தூா், மருதங்காவிளையைச் சோ்ந்தவா் அகிலா(36). இவருக்கு திருமணமாகி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மணல் கடத்தல்: இருவா் கைது

மாா்த்தாண்டம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே மாலன்விளை பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், விளவங்கோடு வட்டாட... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் கஞ்சா விற்பனை: 9 போ் கைது!

நாகா்கோவிலில் கஞ்சா விற்றதாக 9 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், ஆசாரிப்... மேலும் பார்க்க

கலைப் பேரொளி விருதுக்கு 5 போ் தோ்வு!

முள்ளஞ்சேரி வி. முத்தையன் கல்வி அறக்கட்டளை சாா்பில் வழங்கப்படும் கலைப் பேரொளி விருதுக்கு 5 கலைஞா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.இவ்விருதுக்கான இரண்டாம் கட்ட தோ்வுக்குழு கூட்டம், குமரி முத்தமிழ் மன்றத் தலை... மேலும் பார்க்க