செய்திகள் :

பொங்கல் பரிசுத் தொகுப்பு: தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

post image

பொங்கல் விழாவை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைந்து வழங்க ஏதுவாக நாளை (10.01.2025 வெள்ளிக் கிழமை) அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது பற்றி உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் சேர்த்து மொத்தம் 2,20,94,585 குடும்பஅட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி,  ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு  ஆகியவற்றை வழங்க ஆணையிட்டுள்ளார்.

இதையும் படிக்க: நெல்லை ரூ. 4,000, மதுரை ரூ. 3,800, கோவை ரூ. 3,500: விமானத்தில் அல்ல, ஆம்னி பேருந்தில்...!

மேலும், பொங்கல் பரிசுடன் விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்று (09.01.2025 வியாழன்) சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை சின்ன மலையில் இயங்கும் நியாய விலைக் கடையில் முதல்வர் ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி துவக்கி வைத்ததையடுத்து, அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக நாளை (10.01.2025 வெள்ளிக்கிழமை) அனைத்து நியாய விலைக் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்என்று அவர் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் திருச்சித்திரக்கூடம் கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு!

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் உள்ளே உள்ள தில்லை திருச்சித்திரக்கூடம் ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருநாளினை முன்னிட்டு பரமபத வாசல் (சொர்க்க வாசல்) திறப்பு நிகழ்ச்சி வெள... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.10 அடியில் இருந்து 115.65 அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை (ஜன.10) காலை 831 அடியில் இருந்து 758 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்ட வைணவத் தலங்களில் பரமபத வாசல் திறப்பு

விழுப்புரம்: வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வைணவத் தலங்களில் பரமபத வாசல் திறப்பு வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.விழுப்புரம் நகரின் பழைமை வாய்ந்த அருள்மிகு ஜனகவல்லித் ... மேலும் பார்க்க

கிங்ஸ்டன் பட டீசர்!

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள கிங்ஸ்டன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் ஜிவி - 25 படத்தை கமல் ... மேலும் பார்க்க

பொங்கல்: ஜன. 10 - 13 வரை கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் திருநாளை முன்னிட்டு, 10.01.2025 முதல் 13.012025 வரை கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.14.01.2025 பொங்கல் பண்டிகையை முன்னிட... மேலும் பார்க்க

பெரியார் குறித்து சர்ச்சைப் பேச்சு: சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

வள்ளலாரைத்தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்... மேலும் பார்க்க