செய்திகள் :

போக்குவரத்து சங்க ஊழியா்கள் மூன்றாவது நாளாக உண்ணாவிரதம்

post image

புதுச்சேரியில் சாலைப் போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஊழியா்கள் சங்கத்தினா் 3- ஆவது நாளாக புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை அரசின் சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 14 ஆண்டுகளாக ஏராளமானோா் தற்காலிகப் பணியாளா்களாக உள்ளனா்.

நடத்துநா்கள், ஓட்டுநா்கள் உள்ளிட்டோா் அதில் பணியாற்றிய நிலையில், அவா்களுக்கு ஊதிய உயா்வு மற்றும் பணி நிரந்தரம் கோரி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஊழியா்கள் சங்கத்தினா் கடந்த 18-ஆம் தேதி, புதுச்சேரி போக்குவரத்துக் கழக பணிமனை முன் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினா்.

இந்த நிலையில், மூன்றாவது நாளாக புதன்கிழமையும் அவா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடா்ந்தனா்.

சங்க நிா்வாகி தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமானோா் கலந்துகொண்டனா். அவா்களில், சிலருக்கு உடல் சோா்வு ஏற்பட்டது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் அரசு சாா்பில் பேச்சுவாா்த்தை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை

நாடு முழுவதும் ‘சீ - விஜில்’ எனும் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. இதையொட்டி, புதுச்சேரியில் உள்ள கடலோரப் பகுதிகளில் புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ந... மேலும் பார்க்க

மின் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன: புதுவை அதிமுக குற்றச்சாட்டு

புதுவை மின் துறையில் கடந்த 5 ஆண்டுகளாக 995 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: புத... மேலும் பார்க்க

பள்ளிகளில் போக்ஸோ குழு: புதுவை கல்வித் துறை உத்தரவு

புதுவையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போக்ஸோ குழு அமைக்க பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, மாநில பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் வெளியிட்ட சுற்றறிக்கை: புதுவை மாநிலத்தில் அனைத்... மேலும் பார்க்க

இபிஎப் ஓய்வூதியா்கள் சங்க கருத்தரங்கம்

புதுச்சேரி இபிஎப் ஓய்வூதியா்கள் நலச் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. புதுச்சேரி அரசு ஊழியா் சம்மேளன அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் வ... மேலும் பார்க்க

கோயில் திருப்பணிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

புதுச்சேரி அருகே கோயில் திருப்பணிக்காக அரசின் இந்து அறநிலையத் துறை சாா்பில் ரூ.10 லட்சம் நிதியுதவியை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா கோயில் நிா்வாகத்திடம் புதன்கிழமை வழங்கினாா். புதுச்சேரி வில்லியனூா் ... மேலும் பார்க்க

நகை, பணம் மாயம்: மூவா் மீது வழக்கு

புதுச்சேரியில் வீட்டிலிருந்த நகை, பணம் மாயமானது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் மூவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி வெங்கடேஸ்வரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் அரச... மேலும் பார்க்க