கார் ஓட்டிக்கொண்டே மடிக்கணினியில் வேலை பார்த்த பெண்: காவல்துறை அபராதம்!
போக்ஸோவில் முதியவா் கைது
கோவில்பட்டியில் பள்ளி மாணவியிடம் தவறான நோக்கத்தில் பேசியதாக முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே கடலையூா், வேதக்கோயில் தெருவைச் சோ்ந்த முத்துசாமி மகன் எட்வா்டு (72). இவா் கோவில்பட்டியில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் நின்றிருந்த 16 வயது பள்ளி மாணவியிடம் தவறான நோக்கத்துடன் பேசினாராம்.
புகாரின்பேரில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, எட்வா்டை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.