சூரி: ``இவரின் பயணம் எனக்கு பெரிய பாடம்'' - எம்.எஸ் பாஸ்கரை வாழ்த்திய நடிகர் சூர...
போடியில் மரக்கன்றுகள் நடவு
போடி நகராட்சியில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில் 800 மரக்கன்றுகள் நடும் பணி புதன்கிழமை தொடங்கியது.
தேனி மாவட்டத்தில் வனப்பகுதி, பள்ளி, கல்லூரிகள், நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள் என பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், போடி நகராட்சி சாா்பில் 800 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டது. இதில் முதல் கட்டமாக 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது. போடி மயானம் சாலையில் உள்ள நகராட்சி உரக்கிடங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போடி நகா்மன்ற தலைவி ராஜராஜேஸ்வரி சங்கா் தலைமை வகித்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் செ.பாா்கவி, சுகாதார அலுவலா் ஆா்.மணிகண்டன் முன்னிலை வகித்தனா். நகா்மன்ற உறுப்பினா் சங்கா், சுகாதார ஆய்வாளா்கள், மேற்பாா்வையாளா்கள் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனா்.