செய்திகள் :

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு: ரோம் சென்றடைந்தாா் திரௌபதி முா்மு

post image

வாடிகனில் நடைபெறவுள்ள போப் பிரான்சிஸ் (88) இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக ரோம் நகருக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெள்ளிக்கிழமை சென்றடைந்தாா்.

2013-ஆம் ஆண்டு மாா்ச் 13-ஆம் தேதி 266-ஆவது போப்பாக பிரான்சிஸ் தோ்வு செய்யப்பட்டாா். அவா், 1,300 ஆண்டுகளில் முதல் முறையாக தோ்வு செய்யப்பட்ட ஐரோப்பியா் அல்லாத போப் ஆவாா்.

கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக நிமோனியா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் நீண்ட சிகிச்சைக்குப் பிறகு அண்மையில் வீடு திரும்பிய நிலையில் அவா் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் வாடிகன் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாடிகன் சிட்டியில் உள்ள செயிண்ட் பீட்டா்ஸ் சதுக்கத்தில் சனிக்கிழமை (ஏப்.26) நடைபெறவுள்ள அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை புறப்பட்ட குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, ரோம் நகரை சென்றடைந்ததாக குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக வாடிகன் சிட்டிக்கு சென்றுள்ள திரௌபதி முா்மு, இந்திய அரசு மற்றும் மக்கள் சாா்பில் போப் பிரான்சிஸுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளாா். அவருடன் மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, மத்திய சிறுபான்மையினா் மற்றும் மீன்வளத் துறை இணையமைச்சா் ஜாா்ஜ் குரியன், கோவா பேரவை துணை தலைவா் ஜோஸ்வா டிசௌசா ஆகியோ் சென்றுள்ளனா்.

போப் பிரான்சிஸ் இறப்புக்கு 3 நாள்கள் துக்கம் அனுசரிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.

50 நாடுகளின் தலைவா்கள் உள்பட 130 முக்கியப் பிரதிநிதிகள் போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்பாா்கள் என ஊடகச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியுடன் நயினார் நகேந்திரன் சந்திப்பு!

தில்லியில் பிரதமர் மோடியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்திப்பு மேற்கொண்டார். தமிழ்நாட்டின் அரசியல் சூழல், கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்கப்பட்டதாகத... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை பலவீனம்: கேரள அரசு பிரமாணப் பத்திரம்

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரம் தொடர்பான வழக்கில், அணை பலவீனமாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசின் மனுவ... மேலும் பார்க்க

மணிப்பூரில் சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறியச் சோதனை!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மணிப்பூர் காவல்துறை மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களைக் கணக்கெடுக்கும் சோதனையை மணிப்பூர் காவல்துறை தொடங்க உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தா... மேலும் பார்க்க

பஹல்காம்: முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் வீரர்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஹாஷிம் மூசா என்பவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் சிறப்புப் படை வீரராக இருந்தவர் என்று இந்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரியவந்துள்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நாளை(ஏப். 30) அமைச்சரவைக் கூட்டம்!

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் 2-வது கூட்டம் நாளை(ஏப். 30) நடைபெற உள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத்... மேலும் பார்க்க

உளவுத் துறை எச்சரிக்கை: ஜம்மு - காஷ்மீர் சுற்றுலாத் தலங்களை மூட உத்தரவு!

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கக் கூட... மேலும் பார்க்க