செய்திகள் :

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 65 பேர் பலி!

post image

காஸா நகரத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில மணிநேரங்களில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 65க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிக்குழுவிற்கு மத்தியிலான போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் பரிமாற்றம் ஆகிய ஒப்பந்தங்கள், கத்தார் நாட்டின் தலைமையில் நடைபெற்ற சமரச பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) முதல் காஸா மீதான இஸ்ரேலின் போர் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஹமாஸிடம் இருந்து பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீனர்களை முதற்கட்டமாக விடுவிப்பதில் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு உடன்பாடில்லை எனக் கூறப்பட்டிருந்தது. மேலும், ஜன.19 தேதிக்குள் இஸ்ரேல் காஸா பகுதியின் மீது நடத்திவரும் தாக்குதல்கள் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இருப்பினும், இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அறிந்த காஸாவிலுள்ள பாலஸ்தீனர்கள் மற்றும் உலகளவிலுள்ள அவர்களது ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க: ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பட்டது! அதானி குழுமத்துக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட அமைப்பு!

இந்நிலையில், நேற்று (ஜன.15) இரவு அந்த கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு பாலஸ்தீனர்கள் அவர்களது வீடுகளுக்கும் முகாம்களுக்கும் திரும்பியபோது இஸ்ரேல் காஸாவின் மீதான அதன் தாக்குதலை மீண்டும் தொடர்ந்தது.

வடக்கு காஸா பகுதி, ஷெயிக் ரட்வான் குடியிருப்புப் பகுதி, மத்திய காஸா ஆகிய இடங்களில் இஸ்ரேல் நடத்திய தரைவழி, வான்வழி மற்றும் டிரோன் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 65 பேரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அங்கு பணிபுரியும் மருத்துவப் பணியாளர்கள் இந்த தாக்குதல்களில் மொத்தம் 82 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், இந்த தொடர் தாக்குதல்களில் சிக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதினால், பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த ஜன.1 அன்று எடுக்கப்பட்ட கணக்குகளின் படி இஸ்ரேல் சிறைகளில் குறைந்தபட்சம் 10,221 பாலஸ்தீனர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆனால், இதில் இஸ்ரேல் ராணுவத்தினால் போர் காலத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வண்டலூர் பூங்கா: 80,000-க்கும் மேற்பட்டோர் வருகை!

பொங்கல் வாரத்தில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் உள்பட 80,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது பற்றி வண்டலூர்... மேலும் பார்க்க

விஜய் சேதுபதியின் ஏஸ் கிளிம்ஸ் விடியோ!

விஜய் சேதுபதியின் பிறந்த நாளையொட்டி ஏஸ் படத்தின் கிளிம்ஸ் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2ம் பாகம்... மேலும் பார்க்க

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 20 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடம்!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 20 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடத்தைப் பெற்றார்.பொங்கல் பண்டிகையையொட்டி, அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக துணை முதல்வர் உத... மேலும் பார்க்க

பாட்டல் ராதா டிரைலர் அறிவிப்பு!

பாட்டல் ராதா படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.இயக்குநர் பா. இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார்.பரியேறும் பெருமாள் ப... மேலும் பார்க்க

ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவான் வி்ண்வெளி ஆய்வு மையத்தில் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க பி... மேலும் பார்க்க

காசிமேட்டில் மீனவர் வெட்டிக் கொலை! 8 பேர் கைது!

காசிமேட்டில் மீனவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை புது வண்ணாரப்பேட்டை நாகூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (33). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். ... மேலும் பார்க்க