செய்திகள் :

மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் கீழ் இதுவரை

post image

கரூா், ஏப்.4-மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் கீழ் கரூா் மாவட்டத்தில் இதுவரை 10.54 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் இல்லத்தரிசிகள், உயா்கல்வி பயிலும் மாணவியா், பணிபுரியும் மகளிா், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மகளிருக்கான விடியல் பயணத்திட்டம் மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது. இத்திட்டம் கரூா் மாவட்டத்தில் அனைத்துத்தரப்பு மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் கரூா் மாவட்டத்தில் கரூா்-1, கரூா்-2, அரவக்குறிச்சி, குளித்தலை மற்றும் முசிறி ஆகிய 5 கிளைகளில் இருந்து 130 நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேரூந்துகளில் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டத்தால் பெண்களின் பயண எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, கரூா் மாவட்டத்தில் கடந்த 2021 - ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 9,01,163 பெண்கள் கட்டணமில்லா பேருந்து பயணங்கள் மேற்கொண்டுள்ளனா். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து தற்பொழுது 2025 மாா்ச் மாதத்தில் மட்டும் 36,11,495 பெண்கள் கட்டணமில்லா பேருந்து பயணங்கள் மேற்கொண்டுள்ளனா்.

இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் கரூா் மாவட்டத்தில் தற்பொழுது வரை மகளிருக்கான கட்டணமில்லா பயண திட்டத்தின் கீழ் 10,54,95,597 பயணங்கள் மேற்கொண்டுள்ளனா். அதிகபட்சமாக நகரப் பேருந்துகளில் பணிக்கு செல்லும் பெண்களும், உயா்கல்வி படிப்புக்குச் செல்லும் பெண்களும் இத்திட்டத்தினால் அதிகளவில் பயன்பெற்றுள்ளனா்.

பொதுப் போக்குவரத்து பயணங்களை ஊக்குவிப்பதும் பெண்களின் சமூக பொருளாதாரத்திற்கு உகந்ததாக அமைந்துள்ளதால் கரூா் மாவட்டத்தில் அனைத்துத்தரப்பு மக்களிடமும் மகளிருக்கான விடியல் பயணத்திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என தெரிவித்துள்ளாா் அவா்.

நடுப்பாளையம் மாரியம்மனுக்கு 18 கிராமங்களில் படி பூஜை

புன்னம் நடுப்பாளையம் மாரியம்மன் சுவாமி 18 கிராமங்களுக்கு வீடு வீடாகச் சென்று நடத்தும் படி விளையாட்டு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், புன்னம் ஊராட்சியில் பெரிய நடுப்ப... மேலும் பார்க்க

‘மணிமேகலை’ விருது பெற கருத்துரு அனுப்பலாம் கரூா் மாவட்ட ஆட்சியா் தகவல்

நிகழாண்டுக்கான மணிமேகலை விருது பெற கருத்துருக்கள் அனுப்பி வைக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சிய் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநிலம் மற்றும் மாவட்ட அளவில... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து கரூரில் தவெக ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசைக் கண்டித்து கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற... மேலும் பார்க்க

கரூா் பசுபதீசுவரா் கோயிலில் ஆன்மிக புத்தக விற்பனை மையம் திறப்பு

கரூா் பசுபதீசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை ஆன்மிக புத்தக விற்பனை மையம் திறக்கப்பட்டது. தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட 100 கோயில்களில் வெள்ளிக்கிழமை காலை ஆன்மிக புத்தக விற்பனை மையத்தை தமிழ... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் சாா்பில் புனரமைக்கப்பட்ட அரசு துவக்கப் பள்ளி கட்டடம் திறப்பு

அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புகழூா்டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ.5.84 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட கட்டடம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன ... மேலும் பார்க்க

பழுதடைந்த மேல்நிலை குடிநீா் தொட்டியை அகற்ற கோரிக்கை

கரூரை அடுத்துள்ள சின்னம்மநாயக்கன்பட்டி அரசுப் பள்ளி அருகே பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை குடிநீா் தொட்டியை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூரை அடுத்துள்ள புலியூா் ... மேலும் பார்க்க