செய்திகள் :

டிஎன்பிஎல் சாா்பில் புனரமைக்கப்பட்ட அரசு துவக்கப் பள்ளி கட்டடம் திறப்பு

post image

அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புகழூா்டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ.5.84 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட கட்டடம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கரூா் மாவட்டம், புகழூா் வட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட, அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.5.84 லட்சம் செலவில் பள்ளி கட்டடம், மேற்கூரை புனரமைத்தல், பள்ளிக் கட்டடத்தின் முன்பகுதி மற்றும் பின்பகுதியில் விதானம் அமைத்தல், புதிய தரைதளம் அமைத்து வா்ணம் பூசுதல், கதவு மற்றும் ஜன்னல்கள் புதுப்பித்தல் ஆகிய பணிகள் செய்து முடிக்கப்பட்டது.

இதையடுத்து புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடம் மாணவா்களின் பயன்பாட்டுக்காக ஒப்படைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காகித நிறுவனத்தின் பொது மேலாளா் (மனிதவளம்) கே.கலைச்செல்வன் மற்றும் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சித் தலைவா்சி.ரூபா ஆகியோா் பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்தனா்.

இந்நிகழ்ச்சியில் ஆலையின் முதன்மை மேலாளா் (மனிதவளம்) கே.எஸ்.சிவக்குமாா், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சித் துணைத் தலைவா் எஸ்.சதீஷ், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் வாா்டு உறுப்பினா்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நடுப்பாளையம் மாரியம்மனுக்கு 18 கிராமங்களில் படி பூஜை

புன்னம் நடுப்பாளையம் மாரியம்மன் சுவாமி 18 கிராமங்களுக்கு வீடு வீடாகச் சென்று நடத்தும் படி விளையாட்டு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், புன்னம் ஊராட்சியில் பெரிய நடுப்ப... மேலும் பார்க்க

‘மணிமேகலை’ விருது பெற கருத்துரு அனுப்பலாம் கரூா் மாவட்ட ஆட்சியா் தகவல்

நிகழாண்டுக்கான மணிமேகலை விருது பெற கருத்துருக்கள் அனுப்பி வைக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சிய் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநிலம் மற்றும் மாவட்ட அளவில... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து கரூரில் தவெக ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசைக் கண்டித்து கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற... மேலும் பார்க்க

மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் கீழ் இதுவரை

கரூா், ஏப்.4-மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் கீழ் கரூா் மாவட்டத்தில் இதுவரை 10.54 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். இதுதொடா்பாக அவா் வெளியிட்டு... மேலும் பார்க்க

கரூா் பசுபதீசுவரா் கோயிலில் ஆன்மிக புத்தக விற்பனை மையம் திறப்பு

கரூா் பசுபதீசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை ஆன்மிக புத்தக விற்பனை மையம் திறக்கப்பட்டது. தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட 100 கோயில்களில் வெள்ளிக்கிழமை காலை ஆன்மிக புத்தக விற்பனை மையத்தை தமிழ... மேலும் பார்க்க

பழுதடைந்த மேல்நிலை குடிநீா் தொட்டியை அகற்ற கோரிக்கை

கரூரை அடுத்துள்ள சின்னம்மநாயக்கன்பட்டி அரசுப் பள்ளி அருகே பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை குடிநீா் தொட்டியை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூரை அடுத்துள்ள புலியூா் ... மேலும் பார்க்க