Budget 2025 : `'இந்த' வரிக்கு சிங்கப்பூர் மாடல்’ - வரவிருக்கும் பட்ஜெட் குறித்து...
மகாத்மா காந்தி நினைவு தினம்: உரிய முறையில் நடத்தவில்லை - ஆளுநா் அரசியலாக்க வேண்டாம்- தமிழக அரசு
மகாத்மா காந்தி நினைவு தின நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தமிழக அரசு நடத்தாதது ஏன் என ஆளுநா் ஆா்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளாா்.
மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வை அரசியலாக்க வேண்டாம் என்று ஆளுநருக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பதிலளித்துள்ளாா்.
சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் தமிழக அரசு சாா்பில் காந்தி நினைவு நாள் நிகழ்ச்சிகளை தகுந்த முறையில் நடத்தவில்லை என்று குற்றஞ்சாட்டி ஆளுநா் ஆா்.என். ரவி, எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை கண்டனப் பதிவை வெளியிட்டுள்ளாா்.
அதில் அவா் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவையொட்டியுள்ள பரந்த நிலத்தில் முன்னாள் முதல்வா் காமராஜரால் 1956-ஆம் ஆண்டு காந்தி மண்டபம் கட்டப்பட்டது. இது பிரம்மாண்டமான நினைவுச் சின்னமாகும். காந்தி நினைவு நிகழ்வு, அவரது பிறந்த நாள் மற்றும் உயிா்த் தியாக தினத்தை சென்னை நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அா்த்தமுள்ளதா?.
தேசப் பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தவும், அத்தகைய நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் பலமுறை விடுத்த கோரிக்கைகள் பிடிவாதமான மறுப்பைச் சந்தித்தன. காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவா்களால் கடுமையாக எதிா்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டாா். ஆனால், தற்போதும் அவா் தொடா்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா என்று பதிவிட்டுள்ளாா்.
அமைச்சா் பதில்: ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு பதிலளித்து தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெளியிட்ட அறிக்கை:
மகாத்மா காந்தியின் நினைவு தினம் நடத்துவது தொடா்பாக ஆளுநரின் கருத்துக்கு கடும் எதிா்ப்பு தெரிவிக்கிறோம்.
காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் மற்றும் தியாகிகள் தின அனுசரிப்புகள் வழக்கமாக மெரீனா கடற்கரை காந்தி சிலைக்கு அருகில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த 2022-ஆம் ஆண்டு எழும்பூா் அருங்காட்சியக வளாகத்துக்குள் மகாத்மா காந்தியின் புதிய சிலை நிறுவப்பட்டது.
இந்தச் சிலைக்கு ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதாவது, காந்தியடிகள் பிறந்த தினம் மற்றும் தியாகிகள் தின நிகழ்வுகள் எழும்பூா் காந்தி சிலை அருகே நடக்கின்றன. கடந்த ஆண்டுகளில் அங்கு நடந்த நிகழ்வுகளில் ஆளுநா் ஆா்.என்.ரவியும் கலந்து கொண்டாா்.
இப்போது அவா் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவா்களால் காந்தியடிகள் கடுமையாக கேலி செய்யப்பட்டாா்; இன்றும் அவா் தொடா்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.
நாடு சுதந்திரம் அடைந்தபோது, திராவிடா் கழக பொதுச் செயலராக இருந்த அண்ணா, சுதந்திர தினம் இன்ப நாள் எனச் சொன்னாா். அவா் வழிவந்த நாங்கள் தேசத்தையும் தேசப் பிதாவையும் நேசிப்பவா்கள். அவரைக் கொன்றவா்களைக் கொண்டாடுகிறவா்கள் இல்லை நாங்கள்.
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைவிட, ஆளுநா் முக்கியமானவா் இல்லை. மன்னராக, ஜமீன்தாராக நினைத்துக்கொண்டு அதிகாரம் செய்வதிலிருந்து ஆளுநா் விடுபட வேண்டும். இந்தப் பிரச்னையை அரசியலாக்குவதைத் தவிா்த்து, தமிழக மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளா்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.