செய்திகள் :

மகாராஜா - சிங்கம்புலி குறித்து விஜய்யின் பார்வை... ஆச்சரியப்பட்ட இயக்குநர்!

post image

நடிகர் விஜய் மகாராஜா திரைப்படத்தைக் குறித்து சொன்ன கருத்துகளை இயக்குநர் நித்திலன் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

திரையரங்க வெளியீட்டிலேயே இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது. ஓடிடி வெளியீட்டிலும் உலகளவில் வரவேற்பைப் பெற்றது. திரையரங்கில் 100 நாள்கள் கடந்ததும் தயாரிப்பாளர்கள் இயக்குநருக்கு சொகுசு காரை பரிசளித்தனர்.

இதையும் படிக்க: வெங்கட் பிரபு இயக்கத்தில் ரஜினி?

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் நித்திலன் சாமிநாதன், “மகாராஜா படத்தைப் பார்த்த நடிகர் விஜய் நேரில் அழைத்துப் பாராட்டினார். ஒரு பெரிய கமர்சியல் நடிகர் இப்படியெல்லாம் படம் பார்ப்பாரா என்கிற அளவிற்கு மகாராஜா குறித்து அவர் சொன்ன விவரங்கள் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. முக்கியமாக, சிங்கம்புலி மற்றும் மகள் கதாபாத்திரத்திரங்களுக்கு இடையான அவருடைய பார்வையும் புரிதலும் ஆச்சரியப்பட வைத்தன” எனத் தெரிவித்தார்.

நடிகர் விஜய்யுடன் இயக்குநர் நித்திலன் சாமிநாதன்.

நித்திலன் சாமிநாதன் அடுத்ததாக நடிகை நயன்தாராவை மையக் கதாபாத்திரமாக வைத்து திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாகத் தகவல்.

லக்கி பாஸ்கர் டிரைலர்!

நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள 'லக்கி பாஸ்கர்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.நடிகர் துல்கர் சல்மான் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்... மேலும் பார்க்க

சிம்பு - 49 அறிவிப்பு!

நடிகர் சிம்பு நடிக்கும் அவரது 49-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்ப... மேலும் பார்க்க

கவனம் ஈர்க்கும் ஆர்ஜே பாலாஜியின் சொர்கவாசல் டீசர்!

நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவான சொர்கவாசல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.ஆர்ஜேவாக இருந்து நடிகராக மாறியவர் ஆர்ஜே பாலாஜி. நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் இருக்கிறார். நயன்தாராவை வைத்து இயக்... மேலும் பார்க்க

நாக சைதன்யா - சோபிதா திருமண சடங்குகள் துவக்கம்!

நடிகர் நாக சைதன்யா - நடிகை சோபிதா துலிபாலாவின் திருமண நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: இந்த வாரம் வெளியேறும் நபர்களின் பட்டியல்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் வெளியேறும் நபர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரத்தின் தொடக்கத்திலும் பிக் பாஸ் வீட்டில்... மேலும் பார்க்க

4 தோற்றங்களில் நடித்த அருண் விஜய்!

நடிகர் அருண் விஜய் 4 வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளார்.அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மிஷன் சேப்டர்-1 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலில் வெற்றியடைந்தது. மேலும், பாலா இயக்கத்தி... மேலும் பார்க்க