செய்திகள் :

மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே மகன் வெற்றி; ராஜ் தாக்கரே மகன் தோல்வி... குடும்ப உறவில் மேலும் விரிசல்!

post image

மாகிம் தொகுதியில் போட்டியிட்ட அமித் தாக்கரே

மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு கடந்த 20-ம் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலையில் எண்ணப்பட்டது. இத்தேர்தலில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மகன் அமித் தாக்கரே மும்பையில் மாகிம் தொகுதியில் போட்டியிட்டார்.

மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேயின் சகோதரர் மகன் ராஜ் தாக்கரே ஆரம்பத்தில் சிவசேனாவில்தான் இருந்தார். ஆனால் உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட அதிகாரப்போட்டி காரணமாக கடந்த 2006-ம் ஆண்டு சிவசேனாவில் இருந்து விலகி மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற புதிய கட்சியை தொடங்கினார். அதன் பிறகு உத்தவ் தாக்கரேயையும், ராஜ்தாக்கரேயையும் கூட்டணி சேர்க்க பலர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அந்த முயற்சி பலனலிக்கவில்லை. சிவசேனா இரண்டாக உடைந்த போது ராஜ் தாக்கரே பா.ஜ.கவிற்கு ஆதரவாக இருந்தார்.

அமித் தாக்கரே

பா.ஜ.க ஆதரவு

அதோடு சிவசேனாவை உடைத்த ஏக்நாத் ஷிண்டேயை ராஜ்தாக்கரே பல முறை சந்தித்து பேசினார். பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திட்டமிட்ட ராஜ்தாக்கரே அந்த முயற்சி பலனலிக்காமல் போனதால் தனித்து போட்டியிட்டார். இத்தேர்தலில் போட்டியிட ராஜ்தாக்கரே மகன் அமித் தாக்கரே போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனுத்தாக்கல் செய்தார். உடனே அவருக்கு பா.ஜ.க முதல் ஆளாக ஆதரவு கொடுத்தது. ஆனால் அத்தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் சிவசேனா (ஷிண்டே) சதா சர்வான்கரிடம் போட்டியில் இருந்து விலகும்படி பா.ஜ.க கேட்டுக்கொண்டது. ஆனால் அக்கோரிக்கையை சதா சர்வான்கர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

இதையடுத்து ராஜ்தாக்கரே மகன் துணிந்து தனித்து போட்டியிட்டார். இன்று ஓட்டு எண்ணத் தொடங்கிய போது ஆரம்பத்தில் இருந்தே அமித் தாக்கரே முன்னிலையில் இருந்தார். மாகிம் தொகுதியில் ராஜ்தாக்கரே மகன் படிப்படியாக பின்னுக்குத் தள்ளப்பட்டார். உத்தவ் தாக்கரே கட்சி சார்பாக போட்டியிட்ட மகேஷ் சாவந்த் இத்தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார். அமித் தாக்கரே இத்தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். மகேஷ் சாவந்த் 1700 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆதித்ய தாக்கரே - அமித் தாக்கரே

இத்தேர்தல் மூலம் சிவசேனா பவன் இருக்கும் தாதர் பகுதி மீண்டும் உத்தவ் தாக்கரே கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது. இத்தேர்தலில் உத்தவ் தாக்கரே வேட்பாளரை நிறுத்தி ராஜ்தாக்கரேயின் மகன் வெற்றியை தடுத்து நிறுத்தி இருக்கிறார். இதனால் இரு குடும்பத்திற்கிடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. அமித் தாக்கரே மட்டுமல்லாது அவரது மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. அக்கட்சி மாநிலம் முழுவதும் 120 தொகுதியில் போட்டியிட்டது.

8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

இத்தேர்தலில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே ஒர்லி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பில் சிவசேனா சார்பாக ராஜ்ய சபை உறுப்பினர் மிலிந்த் தியோரா நிறுத்தப்பட்டார். அதோடு ராஜ்தாக்கரே கட்சி சார்பாக சந்தீப் தேஷ்பாண்டேயும் நிறுத்தப்பட்டு இருந்தார்.

ஆதித்ய தாக்கரே

இதனால் இத்தொகுதியில் கடும் போட்டி நிலவியது. ஆனாலும் இத்தொகுதியில் ராஜ்தாக்கரே போராடி வெற்றி பெற்று இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே மிலிந்த் தியோராவிற்கும் ஆதித்ய தாக்கரேயிக்கும் போட்டி கடுமையாக இருந்தது. இருவரும் அடிக்கடி முன்னிலை பெறுவதும், பின் தங்குவதுமாக இருந்தனர். ஆனால் இறுதியில் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆதித்ய தாக்கரே வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்துக்கொண்டார். மும்பையில் உத்தவ் தாக்கரே இல்லம் இருக்கும் பாந்த்ரா கிழக்கு தொகுதியில் சிவசேனா(உத்தவ்) சார்பாக போட்டியிட்ட வருண் சர்தேசாய் முன்னிலையில் இருக்கிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

``தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நிறைவு; திமுக அரசு சமூக நீதி வழங்காது" - ராமதாஸ் காட்டம்!

இந்திய அரசியலில் சமூகநீதிக் காவலர் என அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் வி.பி சிங் பிறந்த தினம் இன்று. இதை முன்னிட்டு சாதிவாரி கணக்கெடுப்புக்கு குரலெழுப்பியுள்ளார் பாமக தலைவர் ராமதாஸ். தெலுங்கானாவில் சாத... மேலும் பார்க்க

Adani: `அமெரிக்கா குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை!' - என்ன சொல்கிறார் மூத்த வழக்கறிஞர்?!

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா நீதிமன்றத்தின் குற்றப்பத்திரிகையில் கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் அதானி குழுமத்தின் முக்கிய நிர்வாகி வினீத் ஜெயின் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் சாட்டப்படவில்லை என்... மேலும் பார்க்க

பாம்பன் புதிய பாலம்... பயணிகள் ரயில் இயக்க அனுமதி அளித்தது ரயில்வே பாதுகாப்பு வாரியம்!

ராமேஸ்வரம் தீவு பகுதியினை நாட்டின் நில பரப்புடன் இணைக்க கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த ரயில் பாலம் கடல்காற்றின் அரிமானத்தால் வழு இழந்தது. இதையடுத்து புதிய பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ... மேலும் பார்க்க

Israel: `போர் முடிகிறது' - அறிவித்த ஜோ பைடன்... `ஆனாலும், தொடங்கும்' - செக் வைத்த நெதன்யாகு!

'இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் முடிவடைகிறது' என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் தொடங்கியது. பாலஸ்தீனத்திற்கு ஆதாரவாக, லெபனானில் இருக்... மேலும் பார்க்க

Rahul Gandhi: `ராகுல் காந்தியின் இங்கிலாந்து குடியுரிமை!?'; விசாரித்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமையை ரத்து செய்யக்கோரி அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி எஸ்.விக்னேஷ் ஷிஷிர் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய... மேலும் பார்க்க

`ராமதாஸ் விவகாரத்தில் கொதிக்கும் பாஜக' - பாமக மீது பாசமா? அரசியல் கணக்கா?!

லஞ்ச விவகாரம்...இந்திய கோடீஸ்வரரும், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக அறியப்படுபவருமான கௌதம் அதானி தரப்பு ஒப்பந்தம் ஒன்றை பெறுவதற்காக 250 மில்லியன் டாலர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தாகவும், அதை மறைக்க... மேலும் பார்க்க