செய்திகள் :

Rahul Gandhi: `ராகுல் காந்தியின் இங்கிலாந்து குடியுரிமை!?'; விசாரித்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

post image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமையை ரத்து செய்யக்கோரி அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி எஸ்.விக்னேஷ் ஷிஷிர் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ``ராகுல் பிரிட்டிஷ் குடிமகன் என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. ராகுல் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர். இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டிஷ் அரசிடமிருந்து வந்த ரகசிய மின்னஞ்சல்களும் இருக்கிறது. இது குறித்து உரிய அதிகாரிகளிடம் இருமுறை புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பிரியங்கா காந்தி, ராகுல்

இது தொடர்பான விசாரணை நடந்துவரும் நிலையில், இந்த மனு மீது மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் கேட்டிருந்தது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.பி.பாண்டே, ``சம்மந்தப்பட்ட நபரின் புகார் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு வந்துள்ளது. அது தொடர்பாகப் பரிசீலித்து வருகிறோம்." என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி அட்டாவ் ரஹ்மான் மசூதி, நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி, ``அடுத்த விசாரணைக்குள் உள்துறை அமைச்சகத்திடமிருந்து உரியப் பதிலைப் பெற்றுத் தரவேண்டும். இந்த வழக்கு விசாரணை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. மனு தாரரின் புகாரைப் பெற்று உள்துறை அமைச்சகம் செயல்பட்டதா என்பது குறித்து மட்டுமே விசாரணையில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த வழக்கின் அடுத்த விசாரணையை அடுத்த மாதம் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அமித் ஷா, மோடி

இந்த உத்தரவு தொடர்பாக பா.ஜ.க நிர்வாகி எஸ்.விக்னேஷ் ஷிஷிர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், ``இந்த விவகாரத்தில் அடுத்த விசாரணை நாளான டிசம்பர் 19-ம் தேதிக்குள் தெளிவான மற்றும் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்துறை அமைச்சகமும் தனது விசாரணை முடிவுகளை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும். ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை அரசு உடனடியாக ரத்து செய்யும் என்று நான் நம்புகிறேன். இங்கிலாந்து குடியுரிமைப் பதிவேடுகளில் ராகுல் காந்தியின் பெயர் இருப்பதாக இங்கிலாந்து அரசிடமிருந்து எங்களுக்கு நேரடித் தகவல் கிடைத்துள்ளது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இரட்டை குடியுரிமையை சட்டப்பூர்வமாக அனுமதித்தாலும் இந்தியச் சட்டம் அதை அனுமதிப்பதில்லை. ஒருவர் வேறு ஒரு நாட்டின் குடியுரிமையைப் பெற விரும்பினால், அவர் இந்தியக் குடியுரிமையைத் துறக்க வேண்டும். இந்தியக் குடியுரிமை பெற்ற ஒருவர் வேறு ஒரு குடியுரிமையைப் பெற முடியாது என்பது குறிப்பிடதக்கது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

பாம்பன் புதிய பாலம்... பயணிகள் ரயில் இயக்க அனுமதி அளித்தது ரயில்வே பாதுகாப்பு வாரியம்!

ராமேஸ்வரம் தீவு பகுதியினை நாட்டின் நில பரப்புடன் இணைக்க கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த ரயில் பாலம் கடல்காற்றின் அரிமானத்தால் வழு இழந்தது. இதையடுத்து புதிய பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ... மேலும் பார்க்க

Israel: `போர் முடிகிறது' - அறிவித்த ஜோ பைடன்... `ஆனாலும், தொடங்கும்' - செக் வைத்த நெதன்யாகு!

'இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் முடிவடைகிறது' என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் தொடங்கியது. பாலஸ்தீனத்திற்கு ஆதாரவாக, லெபனானில் இருக்... மேலும் பார்க்க

`ராமதாஸ் விவகாரத்தில் கொதிக்கும் பாஜக' - பாமக மீது பாசமா? அரசியல் கணக்கா?!

லஞ்ச விவகாரம்...இந்திய கோடீஸ்வரரும், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக அறியப்படுபவருமான கௌதம் அதானி தரப்பு ஒப்பந்தம் ஒன்றை பெறுவதற்காக 250 மில்லியன் டாலர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தாகவும், அதை மறைக்க... மேலும் பார்க்க

``CA தேர்வின் தேதி மாற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால்'' - மத்திய அரசு குறித்து கனிமொழி

பொங்கல் தினத்தன்று (14.1.2025) CA தேர்வு வைக்கப்பட்டுள்ளதாக அட்டவணை வெளியாகியிருந்தது.இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி,... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பதவியை ராஜினாமா செய்த முதல்வர், துணை முதல்வர்கள்... அடுத்த முதல்வர் யார்..?

மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவி யாருக்கு என்பதில் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. முதல்வர் ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: சிதறிய வாக்குகள்; சின்னம் குளறுபடி... சரத்பவார் படுதோல்விக்கு காரணம் என்ன?

அதிருப்தியில் சரத்பவார்..மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி வெறும் 10 தொகுதியில் மட்டுமே வெற்ற... மேலும் பார்க்க