செய்திகள் :

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு: `எதிர்க்கட்சிகள் இதை செய்தாக வேண்டும்...!' - திருமாவளவன் சொல்வதென்ன?

post image

நடந்து முடிந்த மகாராஷ்டிரா தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்று மகா விகாஷ் கூட்டணி ஆட்சி அமைக்கும் அதே நேரம், எதிர்க்கட்சி கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான தொல். திருமாவளவன் தன் எக்ஸ் பக்கத்தில், ``கேரளாவிலுள்ள வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள பிரியங்கா காந்திக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ள ஹேமந்த் சோரனுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மகாராஷ்டிரா `இந்தியா’ கூட்டணி கூட்டம்

வயநாடு இடைத்தேர்தலில் ராகுல் காந்தி பெற்றதை விடக் கூடுதலாக வாக்குகள் பெற்று மகத்தான வெற்றியை பிரியங்கா காந்தி ஈட்டியுள்ளார். நாடாளுமன்ற மக்களவைக்கு அவர் வரப்போவது இந்தியா கூட்டணிக்கு மேலும் வலிமையைத் தரும். அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் மீது பொய் வழக்குகளைப் போட்டு, ஒன்றிய பா.ஜ.க அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. குறுக்கு வழியில் அவரது முதலமைச்சர் பதவியைப் பறித்தது. இந்தச் சதிகளையெல்லாம் தாண்டி மக்கள் ஆதரவோடு ஹேமந்த் சோரன் மீண்டும் ஆட்சி அமைத்திருக்கிறார். பழங்குடி மக்களின் மகத்தான தலைவரான ஹேமந்த் சோரனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அமித் ஷா, மோடி

மகாராஷ்டிரா மாநிலத்தில் தலித் வாக்குகள் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. தலித் வாக்குகள் இந்தியா கூட்டணிக்குச் செல்லாமல் சிதறடிக்கும் விதமாக எல்லா தொகுதிகளிலும் செல்வி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வி.பி.ஏ கூட்டணியும் வேட்பாளர்களை நிறுத்தின. பா.ஜ.க கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இரண்டையும் எதிர்ப்பதாக அவர்கள் சொல்லிக் கொண்டாலும் "பா.ஜ.க-வுக்கு ஆதரவாகத் தலித் வாக்குகளைப் பிரிப்பதற்குத் தான் அவர்கள் வேட்பாளர்களை நிறுத்தினார்கள்" என்னும் விமர்சனம் பரவலாக உள்ளது.

இது அறிந்தோ அறியாமலோ பா.ஜ.க வுக்குத் துணைபோகும் அவலம் ஏற்பட்டுள்ளது. ''மகாராஷ்டிராவில் பா.ஜ.க-வே எதிர்பாராத ஒரு வெற்றியை அது பெற்றுள்ளது. இந்த வெற்றி மோடி -அமித் ஷா- அதானி கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி” என உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ராவத் கூறியிருப்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஏனெனில், அங்கு நாண்டேட் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், அந்த மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளையும் பா.ஜ.க வென்றுள்ளது.

`இந்தியா’ கூட்டணி

இது ‘மகராஷ்டிராவில் முறைகேடான விதத்தில்தான் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது’ என்ற குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கிறது. இதைப் பற்றித் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், இம்முடிவு பா.ஜ.கவுக்கு எதிரான வாக்குகளைச் சிதறவிடாமல், குறிப்பாக, தலித் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை எதிர்க்கட்சிகளுக்கு உணர்த்துகிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

Adani : `அதானி விவகாரம்; மோடியும் ஸ்டாலினும் மௌனம் காப்பது ஏன்?' - சீமான் கேள்வி!

சோலார் எனர்ஜி திட்ட ஒப்பந்த விவகாரத்தில் முதலீட்டைப் பெற அமெரிக்க முதலீட்டாளர்களை பொய் சொல்லி ஏமாற்றியதாகவும், அதற்காக இந்திய அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாகவும் கௌதம் அதானி மீது அமெரி... மேலும் பார்க்க

Canada: `எங்கள் அதிகாரிகள் குற்றவாளிகள் என்பதை விட நம்பகத்தன்மையற்றவர்கள்...' - ஜஸ்டின் ட்ரூடோ

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனட குடியுரிமைப் பெற்ற சீக்கியர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைசெய்யப்பட்டார். இதில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக நம்பகமான ஆதாரங்கள் இருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின்... மேலும் பார்க்க

`கூட்டணி ஆட்சி, அதிகாரப் பகிர்வு என்பது அமைச்சர் பதவி வாங்குவது மட்டும் இல்லை...' - கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாநாட்டில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், செய்தியாளரிடம் பேசும்போது, "மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக அதிகப்படியான வெற்றி பெற்று ... மேலும் பார்க்க

Modi: `காங்கிரஸால் இனி தனித்து ஆட்சியமைக்க முடியாது... அது ஒட்டுண்ணிக் கட்சி' - பிரதமர் மோடி காட்டம்

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, ஏக்நாத் ஷ... மேலும் பார்க்க

`எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் ஆளுமைகள் இல்லாததால்தான் அதிமுக-வில் சலசலப்பு!' - கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், "மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியில் இருந்ததோ அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதிலி... மேலும் பார்க்க