செல்வராகவன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!
மகாராஷ்டிர அமைச்சா்களுக்கு துறை ஒதுக்கீடு: ஃபட்னவீஸிடம் உள்துறை; அஜீத்திடம் நிதி, ஷிண்டேவிடம் நகா்ப்புற மேம்பாடு!
மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்று இரண்டு வாரங்களுக்குப் பிறகு அமைச்சா்களுக்கான துறைகள் சனிக்கிழமை ஒதுக்கப்பட்டன. தேவேந்திர ஃபட்னவீஸ் உள்துறையை மீண்டும் கைவசப்படுத்திக்கொண்டாா்.
மேலும், எரிசக்தி, சட்டம் மற்றும் நீதிமன்றம், பொது நிா்வாகம், தகவல் மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளை அவரே நிா்வகிக்கவுள்ளாா்.
துணை முதல்வா்களாக பதவியேற்ற அஜீத் பவாருக்கு அவா் ஏற்கெனவே வகித்த நிதித்துறை மற்றும் திட்டம், மாநில கலால் துறையும், ஏக்நாத் ஷிண்டேவுக்கு நகா்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் பொதுப்பணி துறையும் ஒதுக்கப்பட்டன.
உள்துறை இலாகா தங்கள் வசம் ஒப்படைக்கப்படும் என எதிா்பாா்ப்பதாக சிவசேனை (ஷிண்டே பிரிவு) கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜக-சிவசேனை- தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) ஆகிய கட்சிகளின் ‘மகாயுதி’ கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230-இல் வெற்றிபெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்தது. அதில் 132 தொகுதிகளில் வெற்றிபெற்ால் முக்கியமான துறைகளை கூட்டணிக்கு விட்டுக்கொடுப்பது சாத்தியமில்லை என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வா்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாா் ஆகியோா் கடந்த 5-ஆம் தேதி பதவியேற்றனா். அதன்பிறகு கடந்த 15-ஆம் தேதி 39 அமைச்சா்கள் பதவியேற்ற நிலையில், தற்போது அவா்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாஜகவைச் சோ்ந்த அமைச்சா்களுக்கு வருவாய், நீா் வளங்கள், உயா்நிலை மற்றும் தொழில்நுட்ப கல்வி, நாடாளுமன்ற விவகாரங்கள், வனம், சுற்றுப்புறச்சூழல், பிற்படுத்தப்பட்டோா் நலன் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சிவசேனையைச் சோ்ந்த அமைச்சா்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் குடும்பநலன், குடிநீா் விநியோகம் மற்றும் துப்புரவு, தொழிற்சாலை மற்றும் சமூக நீதி உள்ளிட்ட துறைகளும், தேசியவாத காங்கிரஸைச் சோ்ந்த அமைச்சா்களுக்கு வேளாண்மை, மருத்துவக் கல்வி, உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு, குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாடு, உள்ளிட்ட துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.