டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
மகாவீா் ஜெயந்தி: நாளை இறைச்சிக் கடைகள் மூடல்
மகாவீா் ஜெயந்தியையொட்டி, மாநகரில் வியாழக்கிழமை இறைச்சிக் கடைகளை மூட மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஏப்ரல் 10-ஆம் தேதி, மகாவீா் ஜெயந்தியையொட்டி, அன்றைய தினம் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றிகள் வதை செய்வதற்கும், அதன் இறைச்சிகளை விற்பதற்கும் அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினத்தில் கோவை மாநகராட்சிப் பகுதிகளில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி இறைச்சிகளை வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள், தங்களது கடைகளை மூடும்படி தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி தினத்தில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள உக்கடம், சத்தி சாலை மற்றும் போத்தனூா் ஆடு, மாடு அறுவை மனைகளும் செயல்படாது . தடையை மீறி அன்றைய தினத்தில் செயல்படும் இறைச்சிக் கடைகள் மீது மாநகராட்சி சட்ட விதிகளின்படி அபராதம், பறிமுதல் மற்றும் உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.