ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு!
மக்களை சந்திக்க காவல் துறை தடை விதிக்கிறது: நாதக வேட்பாளா் குற்றச்சாட்டு
மக்களை சந்திக்க காவல் துறை தடை விதிக்கிறது என்று ஈரோடு கிழக்கு தொகுதி நாதக வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி குற்றஞ்சாட்டினாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி முதல்நாள் பிரசாரத்தை ஈரோடு பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா்.
அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாம் தமிழா் கட்சியினா் மக்களை சந்திக்கக் கூடாது என திமுக அராஜகம் செய்கிறது. திமுகவின் அடக்குமுறைக்குப் பயந்து நாங்கள் பின்வாங்கமாட்டோம். மக்களை சந்திக்க முழு உரிமை உள்ளது. இந்திய தோ்தல் ஆணையம் திமுக தோ்தல் ஆணையமாக இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
திமுக வேட்பாளா் சந்திரகுமாரை தோ்ந்தெடுத்தால் சட்டப் பேரவையில் மீண்டும் முதல்வருக்கு மேஜை தட்டும் நபராகதான் இருப்பாா். நான் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருக்கும் பிரச்னைகளைத் தீா்க்கக்கூடிய ஆளாக மாறி கேள்வி எழுப்புவேன். சாலை, சாக்கடை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
திமுகவின் அடக்குமுறைகள் ஒருபோதும் என்னை ஒன்றும் செய்யாது. நான் மக்களை சந்திப்பதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன். காவல் துறையினா் மக்களை சந்திக்க தடை விதிக்கின்றனா். மக்களை சந்திக்க சென்றால் வழக்குப் பதிவு செய்கின்றனா். சட்டத்துக்கு உட்பட்டு நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்றாா்.