செய்திகள் :

மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

post image

திருச்சி: மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்ததில் 15 பேர் காயமடைந்தனர்.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்து ஆம்னி பேருந்து, வெள்ளிக்கிழமை நள்ளிரவு மணப்பாறை அருகே யாகபுரம் என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பை உடைத்துக்கொண்டு 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது.

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தோர் ஓடி வந்து பேருந்து உள்ளே இருந்தவர்களை மீட்க உதவினர். பயணிகளும் பேருந்து கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியேறியனர்.

இந்த சம்பவத்தில் 15 பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நல்வாய்ப்பாக பயணிகள் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியேறியதால் உயிரிச்சேதம் தவிர்க்கப்பட்டது.

விடாமுயற்சி: ‘சவதீகா ரீலோடட்’ பாடல் விடியோ வெளியானது!

நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படத்தின் ’சவதீகா’ பாடலின் ரீலோடட் வெர்ஷன் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் ஆக்‌ஷன் கதைக்களத்துடன் உருவ... மேலும் பார்க்க

வெனிசுலா: 6 அமெரிக்கர்கள் விடுதலை!

அமெரிக்க அதிபர் டிரம்பின் தூதர் வெனிசுலா அதிபர் மதுரோவை சந்தித்து பேசிய பின்னர் அந்நாட்டில் சிறைப் பிடிக்கப்பட்டிருந்த 6 அமெரிக்கர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெனிசுலாவி... மேலும் பார்க்க

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா காலமானார்

புதுதில்லி: முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா(79) சனிக்கிழமை காலமானார் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி இதனை தெரிவித்துள்ளார். சாவ்லா மூளை அறுவை சிகிச்சைக்காக தில்லியில... மேலும் பார்க்க

பாஜக ஆதரவாளர்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள்: அரவிந்த் கேஜரிவால்!

தில்லி அரசின் நலத்திட்டங்களைப் பாதுகாக்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆதரவாளர்களும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்குமாறு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கைவிடுத்துள்ளார்.தலைநகர் தி... மேலும் பார்க்க

அணு உலை மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்

புதுதில்லி: அணு உலை மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரா... மேலும் பார்க்க

காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய முதலீட்டுக்கு அனுமதி

காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய முதலீட்டு அனுமதி அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று... மேலும் பார்க்க