செய்திகள் :

மணமாகி இரண்டே மாதங்கள்! பேருந்து மோதி காவல் உதவி ஆய்வாளர், கணவர் பலி!

post image

சிதம்பரத்தில் திருமணமாகி இரண்டே மாதங்களான புதுமணத் தம்பதியர் விபத்தில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகே சித்தாலபாடி பகுதியில் குமராட்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளவரசியும் அவரது கணவர் கலைவேந்தனும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 5) பிற்பகல் ஒன்றாக இருசக்கர வாகனத்தில் சென்றனர். இந்த நிலையில், அவ்வழியாக சென்ற அரசுப் பேருந்து தம்பதியரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இவர்கள் இருவருக்கும் இரண்டு மாதங்கள் முன்னர்தான் திருமணம் நடைபெற்ற நிலையில், தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, இது குறித்து தகவல் அறிந்த அண்ணாமலை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஞானசேகரன் திமுக அனுதாபிதான்; யாராக இருந்தாலும் நடவடிக்கை: மு.க. ஸ்டாலின் உறுதி

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் நிச்சயம் திமுக உறுப்பினர் அல்ல, திமுக அனுதாபி, அவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்திருப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் பேரவையில்... மேலும் பார்க்க

100 சார் கேள்விகளை கேட்க முடியும்! மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு அதிமுக அமளி; வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 100 சார் கேள்விகளை என்னால் கேட்க முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசிய பதிலுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவையிலிருந்து... மேலும் பார்க்க

சென்னையில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

சென்னை: சென்னையில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.பூந்தமல்லி அடுத்த சாத்தங்காடு பகுதியில் உள்ள தனியார் மெட்டல் நிறுவனத்தில் வருமான வரித்துறை புதன்கிழம... மேலும் பார்க்க

யார் அந்த சார்? எஃப்ஐஆர் வெளியானதற்கு யார் காரணம்? முதல்வர் பதிலுரை

சென்னை: யார் அந்த சார்? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரவையில் இன்று முதல் முறையாக விளக்கம் அ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் மனுநீதிச் சோழன் ஆட்சி! செல்வப்பெருந்தகை

தமிழ்நாட்டில் மனுநீதிச் சோழன் ஆட்சி நடைபெற்று வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவரும், அக்கட்சியில் பேரவைக் குழுத் தலைவருமான செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்... மேலும் பார்க்க

ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதியா? ஆர்.பி. உதயகுமார்

சென்னை: தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதியா என்றும், எஃப்ஐஆர் வெளியிட்டு, புகார் அளிக்க வருவோர் அஞ்சும் நிலையை அரசு ஏற்படுத்திவிட்டது என்றும் அதிமுக எம்எல்ஏ ஆர்.பி. உதய... மேலும் பார்க்க