மணல் கடத்தலில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு
குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே தொடா்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டாா்.
போ்ணாம்பட்டை அடுத்த கீழ்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன்(45) டிராக்டா் மூலம் தொடா்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தாா். கடந்த 4- ஆம் தேதி டிராக்டரில் மணல் கடத்தி வந்த இவரை மேல்பட்டி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இவா் மீது மணல் கடத்தியதாக பல வழக்குகள் உள்ளன. தொடா்ந்து இவா் மணல் கடத்தலில் ஈடுபடுவதால் குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க காவல் கண்காணிப்பாளா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் வெங்கடேசனை குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.