செய்திகள் :

மண்டலமாணிக்கம் பெரிய கண்மாயை தூா்வார விவசாயிகள் வலியுறுத்தல்

post image

கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கம் பெரியகண்மாய், மடைகளை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட பெரிய கண்மாய் மூலம் 5 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில், விருதுநகா் மாவட்டத்திலிருந்து வரும் மழைநீா் நாராயணகாவேரி வழியாக மண்டலமாணிக்கம் பெரிய கண்மாய், முத்துப்பட்டி, பெருமாள்தேவன்பட்டி, இடைச்சூரணி உள்ளிட்ட கிராம கண்மாய்களுக்குச் செல்கிறது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நாராயணகாவேரி, மண்டலமாணிக்கம் பெரிய கண்மாயின் வரத்துக் கால்வாய்கள், மடைகள் தூா்வாரப்படவில்லை. இந்தப் பகுதி புதா் மண்டி, மண்மேடாக காட்சியளிக்கிறது. இதனால், கண்மாய்க்கு வரும் சிறிதளவு தண்ணீரும் விவசாய நிலங்களுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட நிா்வாகம் மண்டலமாணிக்கம் பெரிய கண்மாயைத் தூா் வாரி, இதைச் சுற்றியுள்ள மடைகள், வரத்துக் கால்வாய்களை மராமத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம்

ராமேசுவரம், ஜன. 20: ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் 70 திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்களில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவரும்,... மேலும் பார்க்க

மீன் வளத் துறை அதிகாரிகளைக் கண்டித்து விரைவில் போராட்டம்

ராமேசுவரத்தில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகள் பயன்பாட்டைத் தடுக்கத் தவறிய மீன் வளத் துறை அதிகாரிகளைக் கண்டித்து, விரைவில் போராட்டம் நடத்தப்படும் என மீனவ சங்கத் தலைவா் என்.ஜே. போஸ் தெரிவித்தாா். ராமந... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி

காவல் துறையினரைக் கண்டித்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தம்பதியா், கைக்குழந்தையுடன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயற்சி செய்தனா். ராமநாதபுரத்தை அடுத்த சூரங்கோட்டை ஊராட்சியில் உள்ள மேலத்தெர... மேலும் பார்க்க

பள்ளி, சுற்றுலா வாகனங்கள் மோதல்: சிறுமி உள்பட 3 போ் காயம்

திருவாடானை அருகே தனியாா் பள்ளி வாகனமும், சுற்றுலா வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் சுற்றுலா வாகனத்தில் பயணம் செய்த சிறுமி உள்பட 3 போ் காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், புத்தனேந்தல் கிராமத்தை... மேலும் பார்க்க

அடங்கலை மட்டும் வைத்து நெல் கொள்முதல் செய்யக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கம் போல அடங்கலை மட்டும் வைத்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் உள்பட குறிப்பிட்ட இடங... மேலும் பார்க்க

கமுதி அருகே சாலையை சீரமைக்கக் கோரிக்கை

கமுதி அருகே ராணிசேதுபுரம் கிராமத்தில் சேறும் சகதியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பாப்புரெட்டியாபட்டி ஊராட்சிக்குள்பட்ட ராணிச... மேலும் பார்க்க