செய்திகள் :

மதுரையில் லாரி - பேருந்து மோதி விபத்து

post image

மதுரையில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது வேகமாக வந்த தனியார் பயணிகள் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை விமான நிலையம் அருகே வெளிப்புற வட்டச்சாலையில் வேகமாக வந்த பேருந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியதில் இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் பேருந்து இந்த விபத்தில் சிக்கியதாகவும் இதில், பேருந்தில் இருந்த 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர். வயதான பெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்துக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்க முடியாமல், கிரேன் வரவழைக்கப்பட்டு, கிரேன் உதவியோடு பேருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அதில் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேருந்து ஓட்டுநர் அதிவேகமாக பேருந்தை இயக்கியதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. பேருந்து மோதிய வேகத்தில், சாலையோரம் நின்றிருந்த லாரி, அதன் முன் நிறுத்தப்பட்டிருந்த காரை இடித்ததில், கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

2026 தேர்தலை நிர்ணயிக்கப் போவது மது ஊழலும், மணல் கொள்ளையும் தான்: தமிழிசை

2026 தேர்தலை நிர்ணயிக்கப் போவது மது ஊழலும், மணல் கொள்ளையும் தான் என்று பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜனின் தந்தை குமர... மேலும் பார்க்க

கல்வித் துறைக்கு தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி எவ்வளவு தெரியுமா?

தமிழக நிதிநிலை அறிக்கையை பார்த்தவர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும், பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது.தமிழக அரசு, பள்ளிக் கல்வ... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் எப்படி இருந்தது? அரசியல் கட்சிகளின் கருத்து!

வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளும் இது குறித்து தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளனர். மேலும் பார்க்க

திமுகவினர் பயனடையும் பட்ஜெட்: அண்ணாமலை விமர்சனம்

திராவிட முன்னேற்றக் கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை விமர்சித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நித... மேலும் பார்க்க

ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை: உயர்நீதிமன்றம் உறுதி

விதிகளை மீறி வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜவாஹிருல்லா உள்பட ஐந்து பேரின் சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உற... மேலும் பார்க்க

ஏப். 30 வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: அப்பாவு

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்... மேலும் பார்க்க