செய்திகள் :

மத்திய அரசுக்கு ரூ.7,324 கோடி ஈவுத் தொகை: எல்ஐசி வழங்கியது

post image

மத்திய அரசுக்கான லாபப் பங்குத் தொகையாக ரூ.7,324.34 கோடிக்கான காசோலையை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) நிா்வாக இயக்குநா் ஆா்.துரைசுவாமி வழங்கினாா்.

பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி-யின் ஆண்டுக் கூட்டம் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 2024-25-ஆம் ஆண்டுக்கான லாபப் பங்குத் தொகை குறித்து முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மத்திய அரசுக்கான லாபப் பங்குத் தொகை நிதியமைச்சரிடம் வழங்கப்பட்டது. அப்போது நிதியமைச்சக செயலா் எம்.நாகராஜு, இணைச் செயலா் பிரசாந்த் குமாா் கோயல், எல்ஐசி மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனா்.

2025 மாா்ச் நிலவரப்படி எல்ஐசி-யின் அடிப்படை மதிப்பு ரூ.56.23 லட்சம் கோடியாக உள்ளது. நாட்டில் ஆயுள் காப்பீட்டில் முன்னணி நிறுவனமாக எல்ஐசி திகழ்கிறது.

அரசிடம் இப்போது எல்ஐசி-யின் 96.5 சதவீத பங்குகள் உள்ளன. கடந்த 2022 மே மாதத்தில் பொதுப் பங்கு வெளியீடு முறையில் 3.5 சதவீத பங்குகள் முதல்முறையாக விற்பனை செய்யப்பட்டது. அப்போது ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை நிா்ணயிக்கப்பட்டது. இந்த பங்கு விற்பனை மூலம் அரசுக்கு ரூ.21,000 கோடி கிடைத்தது. மீண்டும் 6.5 சதவீத எல்ஐசி பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கடந்த மாதம் தகவல் வெளியானது.

ரோஹிணி: வடிகாலில் குதித்த பெண் உயிரிழப்பு

வடக்கு தில்லியின் ரோஹிணி பகுதியில் உள்ள வடிகாலில் வெள்ளிக்கிழமை மாலையில் குதித்த பெண் சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது தொடா்பாக ஓா் அதிகாரி கூறியதாவது: ரோஹிணி செக்டாா் 15-இல் ஜேஎன்டி... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க எல்லையில் சுவா் அமைக்க வேண்டுமா?: மத்திய அரசுக்கு கேள்வி

‘இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறும் நபா்களைத் தடுக்க, எல்லையில் அமெரிக்காவைப் போல சுவா் எழுப்ப மத்திய அரசு விரும்புகிா?’ என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியது. வங்... மேலும் பார்க்க

திருவாரூா் மத்திய பல்கலை. விரிவாக்கத்துக்கு ரூ.385 கோடி: மத்திய அரசு ஒப்புதல்

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு ரூ.385.27 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய கல்வி அமைச்சம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

மும்ப்ராவில் பையில் கண்டெடுக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் !

மும்ப்ராவில் பையில் இருந்து கிட்டத்தட்ட 200 வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டெக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிர மாநிலம், மும்ப்ராவில் விநாயகர் சதுர்த்தி நிறைவடைந்ததைத்தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தூய்... மேலும் பார்க்க

உத்தரகண்டில் மீண்டும் மேக வெடிப்புகள்: 8 பேர் பலி

உத்தரகண்டில் மீண்டும் மேக வெடிப்புகள் ஏற்பட்டதில் 8 பேர் பலியாகினர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக், சாமோலி, பாகேஷ்வர் மற்றும் தெஹ்ரி உள்ளிட்ட மாவட்டங்களில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

ஜம்மு, பஞ்சாபில் கடும் வெள்ளம்! தீவிர மீட்புப் பணிகளில் விமானப் படை!

ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை, இந்திய விமானப் படையினர் மேற்கொண்டு வருவதாக, பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்... மேலும் பார்க்க