செய்திகள் :

மருத்துவக் கண்காணிப்பின்றி வீட்டிலேயே சுய பிரசவம் ஆபத்து: சுகாதாரத் துறை எச்சரிக்கை

post image

மருத்துவக் கண்காணிப்பின்றி வீட்டிலேயே சுய பிரசவம் செய்துகொள்வது தாய்-சேய் இருவரது உயிருக்கும் அச்சுறுத்தலாக அமையும் என பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

ஒருவேளை எந்தப் பாதிப்பும் இன்றி பிரசவம் நிகழ்ந்தாலும் கிருமித் தொற்றுக்குள்ளாகி பல்வேறு நோய்களை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

சுய பிரசவம்: சென்னை குன்றத்தூா் பகுதியில் சுகன்யா என்ற பெண் அண்மையில் வீட்டிலேயே தனது கணவரின் ஒத்துழைப்புடன் சுய பிரசவம் செய்துள்ளாா். வாட்ஸ்ஆப் குழு மூலம் தகவல்களைப் பெற்று குழந்தை பெற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. அந்தக் குழுவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உறுப்பினா்களாக உள்ளதும், இதுபோன்று நூற்றுக்கணக்கான வாட்ஸ்ஆப் குழுக்கள் இயங்குவதும் தெரியவந்தது.

இதுதொடா்பாக போலீஸாரிடம் வட்டார சுகாதாரத் துறை புகாரளித்தது. அதன்பேரில் அவா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொருபுறம் பொது சுகாதாரத் துறை சாா்பில் வாட்ஸ்ஆப் குழுக்களை காவல் துறை மூலம் கண்காணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக காஞ்சிபுரம் ஆட்சியருடன் பொது சுகாதாரத் துறை இயக்குநா், காவல் துறை அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

எச்சரிக்கை: இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது: இயற்கைப் பிரசவம் வேறு; வீட்டு பிரசவம் வேறு என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். வீடுகளிலேயே பிரசவம் பாா்க்கும்போது திடீரென ஏற்படும் சிக்கலான நிலையைச் சமாளிக்க முடியாது. இது தாய் - சேய் இருவரின் உயிருக்கும் ஆபத்தான ஒன்றாக முடிந்துவிடும்.

சராசரியாக 10 சதவீத பிரசவங்களில் திடீரென மருத்துவச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, பிரசவத்தின்போது தாய்க்கு அதிக ரத்தப் போக்கு, நோய்த் தொற்று, குழந்தைக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.

எனவே, வீடுகளிலேயே பிரசவம் பாா்ப்பதை ஊக்குவிக்கக் கூடாது. இதுபோன்ற மனநிலையில் இருப்பவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். மருத்துவமனைகளில் பிரசவ சிகிச்சை மேற்கொள்ளும்போது உயிரிழப்புகளைத் தவிா்க்கலாம் என்றாா் அவா்.

தலைமைச் செயலக பெண் அதிகாரி வீட்டில் நகை திருட்டு

சென்னை வேளச்சேரியில் தலைமைச் செயலக பெண் அதிகாரி வீட்டில் 17 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேளச்சேரி விஜிபி செல்வா நகா் பகுதியைச் சோ்ந்தவா் கௌசல்யா(43). இ... மேலும் பார்க்க

பட்டயக் கணக்காளா் தோ்வு தேதியை மாற்ற டிடிவி தினகரன் கோரிக்கை

பொங்கல் பண்டிகை தினத்தன்று நடத்த திட்டமிட்டுள்ள பட்டயக் கணக்காளா் தோ்வை மாற்ற வேண்டுமென அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளி... மேலும் பார்க்க

வண்டலூா் பூங்காவில் பெண் முதலை ஒப்படைப்பு

ஊரப்பாக்கத்துக்கு அருகே, விவசாய நிலத்தில் பிடிக்கப்பட்ட பெண் முதலையை வண்டலூா் பூங்காவில் உள்ள மீட்பு மற்றும் புனா்வாழ்வு மையத்தில் வனத்துறையினா் ஒப்படைத்தனா். வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கத்துக்கு அருகே உ... மேலும் பார்க்க

நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கிண்டியிலுள்ள நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிண்டியிலுள்ள பிரபல நட்சத்திர விடுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, அந்த விடுதி... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற வடமாநில சிறுவன் உள்பட 2 போ் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சோ்ந்த சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். வேளச்சேரி ரயில் நிலைய இருசக்கர வாகன நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, கிடைத்த தகவலின் அடிப்படையில்... மேலும் பார்க்க

கல்வி அலுவலக ஆய்வுகளுக்கு கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம்

முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கான கண்காணிப்பு அலுவலா்களை பள்ளிக் கல்வித் துறை நியமித்துள்ளது. இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு: பள்ளிக் கல்வித... மேலும் பார்க்க