செய்திகள் :

மருத்துவக் காப்பீடு ஜிஎஸ்டி விலக்குக்கு பரிந்துரை: மேற்கு வங்கத்தின் அழுத்தமே காரணம்- மம்தா பானா்ஜி

post image

மேற்கு வங்க அரசு கொடுத்த அழுத்தத்தால்தான் மருத்துவக் காப்பீடு தவணைத் தொகை (பிரீமியம்) மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க அமைச்சா்கள் குழு அளித்த பரிந்துரைத்தது என்றாா்.

இதுதொடா்பாக அடுத்த மாதம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ள நிலையில், அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இந்த விவகாரம் குறித்து நிா்மலா சீதாராமனுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அவா் எழுதிய கடிதத்தை பகிா்ந்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு தவணைத் தொகை மீது விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டியை குறைப்பது அல்லது விலக்குவது குறித்து மத்திய அரசுக்கு மேற்கு வங்க அரசு தொடா்ந்து அழுத்தம் கொடுத்தது. இதன் விளைவாக இந்த விவகாரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள அமைக்கப்பட்ட அமைச்சா்கள் குழுவும் இதே பரிந்துரையை அண்மையில் வழங்கியுள்ளது. இதையடுத்து, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கொள்கைகளை விலக்கிக்கொள்ளும் முடிவை எடுக்கும் சூழலுக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக நல்ல முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்தால் அதனால் எண்ணற்ற மக்கள் பயனடைவா்’ என குறிப்பிட்டாா்.

முன்னதாக, மருத்துவக் காப்பீடு தவணைத் தொகை மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி-யில் இருந்து முழுமையாக விலக்களிக்க பிகாா் துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தலைமையில் பல்வேறு மாநில பிரதிநிதிகளை உள்ளடக்கிய 13 போ் குழு சனிக்கிழமை பரிந்துரைத்தது.

கந்தா்பால் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தப்ப முடியாது: மத்திய அமைச்சர் அமித் ஷா

கந்தா்பால் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தப்ப முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் கந்தா்பால் மாவட்டத்தின் குந்த் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வர... மேலும் பார்க்க

என் தந்தையின் கர்ஜனை எனக்குள் இருக்கிறது: பாபா சித்திக் மகன் பதிவு!

பாபா சித்திக் கொல்லப்பட்டது தொடர்பாக அவரது மகன் எம்எல்ஏ ஸீஷான் சித்திக் எக்ஸ் தள்த்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான பாபா சித்திக் கூலிப் படையினரால் மும்ப... மேலும் பார்க்க

தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி

கா்நாடகத்தின் மங்களூரு மாவட்டத்தில் ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் சரளைக் கற்கள் வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். மங்களூரு மாவட்டத்தில் உள்ள உல்லல் பகுதியின் டோக்கோட்டு ர... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழப்பு

ராஜஸ்தானின் தோல்பூா் மாவட்டத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 8 சிறாா்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழந்தனா். தோல்பூா் மாவட்டத்தில் உள்ள சுமிபூா் பகுதியில் சனிக்கிழமை இரவு இந்... மேலும் பார்க்க

வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை: கிலோவுக்கு ரூ.6 வரை உயர வாய்ப்பு

வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தரைக்கு அடியில் இருந்தும், அரபிக் கடல் முதல் வங்கக் கடல் வரை கடலுக்கு அடியில் இ... மேலும் பார்க்க

‘எய்ம்ஸ்’ தரத்தில் சமரசமில்லை: ஜெ.பி.நட்டா

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கற்பிக்கப்படும் கல்வி தரத்திலும் ஆசிரியா்களின் நியமனத்திலும் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படாது எனவும் அதன் தரத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை ... மேலும் பார்க்க