செய்திகள் :

மழையில் முளைத்த காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு வாந்தி, மயக்கம்: சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு

post image

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே மழை காலத்தில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், புட்லூா் ஊராட்சியைச் சோ்ந்த கோ-ஆப் டெக்ஸ் நகரைச் சோ்ந்தவா் லட்சுமி (46). இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை லட்சுமி தன் வீட்டருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையில் பழைய கதவில் முளைத்திருந்த காளான்களை 2 கிலோ வரை பறித்து, குடும்பத்துடன் சமைத்து சாப்பிட்டுள்ளனா்.

இதனால், லட்சுமி மற்றும் குடும்பத்தைச் சோ்ந்த சாந்தி (45), அலமேலு (31), வெங்கடேஷ் (23), சரண்யா (14) ஆகிய 5 பேருக்கும் வயிற்றுப் போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அவா்கள் 5 பேரும் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காளான்கள் முளைத்த இடம், சமைத்து சாப்பிட்டது குறித்து மாவட்ட சுகாதார அலுவலா் பிரியா ராஜ் உத்தரவின் பேரில், ஊராட்சித் தலைவா் லோகம்மாள் கண்ணதாசன், வட்டார மருத்துவ அலுவலா் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான சுகாதாரத் துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

அங்கிருந்து குடிநீா் மற்றும் காளான்களை ஆய்வுக்காக அவா்கள் எடுத்துச் சென்றனா். தொடா்ந்து மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, மழை காலத்தில் முளைக்கும் காளான்களை எந்தக் காரணம் கொண்டும் உள்கொள்ளக் கூடாது என பொதுமக்களுக்கு சுகாதார அலுவலா்கள் அறிவுறுத்தினா்.

சோழவரம் ஏரியை சீரமைக்கும் பணி மும்முரம்

மாதவரம்: செங்குன்றம் அடுத்த சோழவரம் ஏரியைத் தூா்வாரி சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று நீா்வளத் துறை அதிகாரி தெரிவித்தாா்.சென்னை மக்களுக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் சோழவரம் ஏரியும் ஒ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி முகமை கூட்டத்தில் பங்கேற்க ஊராட்சி செயலா் மாரடைப்பால் மரணம்

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் திங்கள்கிழமை கலந்தாய்வுக் கூட்டத்திற்கு வந்த மத்தூா் ஊராட்சி செயலா் மாரடைப்பால் மரணம் அடைந்தாா்.திருத்தணி ஊராட்சி ஒன்றியம், மத்தூா் கிரா... மேலும் பார்க்க

மாவட்ட அளவில் தடகள போட்டிகள்: வென்றவா்களுக்கு பதக்கம், சான்றிதழ்

திருத்தணி: மாவட்ட அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு எம்எல்ஏ ச.சந்திரன் பதக்கம், சான்றிதழ் வழங்கினாா்.திருவள்ளூா் வருவாய் மாவட்ட அளவில் அரசு, தனியாா் ... மேலும் பார்க்க

ஸ்ரீ பாமா ருக்மணி சமேத வேணுகோபால் கோயில் திருவிழா

மாதவரம்: செங்குன்றம் அருகே ஸ்ரீ பாமா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி சன்னதியில் புரட்டாசி மாத திருவிழா திங்கள் கிழமை நடைபெற்றது.செங்குன்றம் அடுத்த வடகரை ஊராட்சி பாட சாலை தெருவில் உள்ள இக்கோயிலில் 87-ஆம... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 80 லட்சம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 80 லட்சத்து 7 ஆயிரத்து, 917 ரூபாய் ரொக்கம் மற்றும் 234 கிராம் தங்கம், 3,456 கிராம் வெள்ளி ஆகியவற்றை செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித... மேலும் பார்க்க

ஐயப்ப சுவாமி கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள ஸ்ரீஐயப்ப சுவாமி சந்நிதிக்கு குடமுழுக்கு, 42 அடி உயர சிவலிங்கத்துக்கு அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஸ்ரீப... மேலும் பார்க்க