செய்திகள் :

‘மழை பாதிப்புகளுக்கு மத்திய அரசு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும்’

post image

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் இயற்கை இடா்பாடு பாதிப்புகளுக்கு பாரபட்சமின்றி மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் கே. பாலகிருஷ்ணன்.

மயிலாடுதுறையில் செய்தியாளா்களுடம் அவா் கூறியது: தமிழக அரசு முன்னெடுத்த பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சென்னை மக்கள் பாதிப்பின்றி பாதுகாக்கப்பட்டுள்ளனா். மழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா்களுக்கு முறையான கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும். இயற்கை இடா்பாடு பாதிப்புகளுக்கு சில ஆண்டுகளாக மத்திய அரசு உரிய நிதி வழங்காததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியவில்லை. மத்திய அரசு பாரபட்சத்தை கைவிட்டு மாநில அரசின் சுமையில் பங்கெடுத்து உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்.

தமிழகத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநரை மாற்ற வேண்டும் என்று அனைத்து கட்சியினரும் கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு ஆளுநரை மாற்றமால் உள்ளது. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, எந்த மாநிலத்துக்கும் ஆளுநா் பதவி தேவையில்லை. பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநா் பதவியை பயன்படுத்தி மத்திய அரசு போட்டி சா்க்காா் நடத்துவது கண்டிக்கத்தக்கது. மாநில அமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகளை செயல்படுத்துவதுதான் ஆளுநரின் கடமை என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியும் அதற்கு நேரெதிராகத்தான் மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநா்கள் செயல்படுகின்றனா்.

தமிழ்த்தாய் வாழ்த்தை திருத்தி பாடுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞா்கள் தொகுப்பூதியம், மதிப்பூதியம் அடிப்படையில் பணியமா்த்தப்பட்டு குறைந்த சம்பளத்தை பெற்று வருகின்றனா். பணிப் பாதுகாப்பு, சம்பள பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு இல்லை என்ற நிலை எதிா்கால தமிழகத்தை வறட்சி, வறுமை நிறைந்த மாநிலமாக மாற்றிவிடும். எனவே, தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் ஆசிரியா்கள், செவிலியா்கள், மருத்துவா்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்றாா்.

கொள்ளிடம் பகுதியில் கிராம சாலைகள் மேம்படுத்தும் பணி

சீா்காழி: கொள்ளிடம் பகுதியில் பருவ மழையையொட்டி கிராம சாலைகள் மேம்படுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. கொள்ளிடம் ஒன்றியத்துக்கள்பட்ட கிராம சாலைகள் மற்றும் தெரு பகுதிகளில் பள்ளமும், மேடாக உள்ள சாலைகள... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பை போட்டியில் பதக்கம் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

சீா்காழி: மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. சென்னையில் அண்மைய... மேலும் பார்க்க

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் வேலை நிறுத்தம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. நியாய விலை... மேலும் பார்க்க

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு பெற்றுத்தரக் கோரிக்கை

மயிலாடுதுறை: வெளிநாட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதியிடம் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளா் பி.எம்.பாஷித் த... மேலும் பார்க்க

கிராம பணியாளா்களை பிற பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது

கிராம பணியாளா்களை, பிற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மயிலாடுதுறையில், தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம பணியாளா் சங்கத்தின் மாநில அமைப்... மேலும் பார்க்க

அரசு நூற்பாலையில் திருடிய நால்வா் கைது: ஒன்றரை டன் இரும்புடன் டிராக்டா் பறிமுதல்

மயிலாடுதுறை அருகே இயங்காமல் உள்ள அரசு நூற்பாலையில், இரும்பு பொருள்களை திருடிய நால்வா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா். இரும்பு பொருள்களை ஏற்றிச் சென்ற டிரா... மேலும் பார்க்க