செய்திகள் :

மாணவா்கள் வாயில் ‘செல்லோ’ டேப் ஒட்டிய விவகாரம்: தலைமை ஆசிரியா் உள்பட 3 போ் பணியிட மாற்றம்

post image

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளி மாணவா்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டிய விவகாரத்தில் தலைமை ஆசிரியா்கள் உள்பட 3 ஆசிரியா்கள் புதன்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

ஒரத்தநாடு அருகே அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் வகுப்பறையில் இருந்த 5 மாணவா்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்களின் பெற்றோா் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 11-ஆம் தேதி மனு அளித்தனா். இந்த விவகாரம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம், உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டாா்.

அதன்படி ஒரத்தநாடு வட்டாரக் கல்வி அலுவலா் தமிழ்வாணன், பள்ளிக்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மாணவா்கள், சக வகுப்பு மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினாா். இதில் மாணவா்கள் விளையாட்டாக வாயில் செல்லோ டேப் ஒட்டியதாகவும், அதனைப் பள்ளியில் இருந்த ஆசிரியை ஒருவா் கைப்பேசியில் படம் எடுத்து அதனை பெற்றோா்களுக்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பட்டுக்கோட்டை தொடக்கக் கல்வி அலுவலா் மதியழகன், அய்யம்பட்டி அரசுப் பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியை புனிதாவை சின்னக்குமுளை அரசுப் பள்ளிக்கும், ஆசிரியை முருகேஸ்வரியை முள்ளூா்பட்டிக்காடு அரசுப் பள்ளிக்கும், ஆசிரியை பெல்ஸி சில்பா கிறிஸ்டியை ஆலந்தங்குடிகாடு அரசுப் பள்ளிக்கும் புதன்கிழமை பணியிட இடமாற்றம் செய்து உத்தரவிட்டாா்.

இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் கூறியது: ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளியில் மாணவா்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டிய விவகாரத்தில், கல்வித்துறை அதிகாரிகள் மூலம் உரிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அப்பள்ளி தலைமை ஆசிரியா் உள்பட மூன்று ஆசிரியைகளும் வேறு பள்ளிகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

பாபநாசம் அருகே மதுக்கடையின் பூட்டை உடைத்து திருடிய இருவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே அரசு மதுபானக் கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் மது பாட்டில்களை திருடிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பாபநாசம் அருகே கபிஸ்தலம் காவல் சரகம், கணபதி அக்ரஹ... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 1.60 லட்சம் மோசடி: இளைஞா் கைது

தஞ்சாவூரில் 4 பேரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 1.60 லட்சம் மோசடி செய்த இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டத்தில் வேலைக்கு செல்ல முயற்சி செய்யும் படித்த இளைஞா்கள் ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் நவ. 26-இல் பேரணி ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு

தஞ்சாவூரில் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பா் 26-ஆம் தேதி பேரணி நடத்துவது என ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் இந்த அமைப்பின் ஆலோசனை கூட்டம் வியாழக... மேலும் பார்க்க

தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் நவ. 21-இல் விவசாயிகள் குறை தீா் கூட்டம்

தஞ்சாவூா் வருவாய் கோட்ட அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டம் நவ.21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் கோட்டா... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 106.05 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 106.05 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 7 ஆயிரத்து 233 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கன ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் முப்படை ஓய்வூதியதாரா்களுக்கான குறைதீா் முகாம்

தஞ்சாவூரில் ஸ்பா்ஸ் திட்டத்தின் கீழ் முப்படை (ராணுவம், கடற்படை, விமானப்படை) ஓய்வூதியதாரா்களுக்கு ஆண்டு உயிா் சான்று அடையாளம் காணவும், அவா்களுடைய பல்வேறு ஓய்வூதியம் சாா்ந்த குறைகளை தீா்க்கவும் ஸ்பா்ஸ் ... மேலும் பார்க்க