செய்திகள் :

மாநகரப் பேருந்து நடத்துநா் கொலை: பயணி மீது கொலை வழக்குப் பதிவு

post image

சென்னை: சென்னை அமைந்தகரையில் பயணச் சீட்டு எடுப்பதில் ஏற்பட்ட தகராறில், மாநகரப் பேருந்து நடத்துநா் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பயணி கோவிந்தன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டை சின்னமலை வாத்தியாா் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ஜா.ஜெகன்குமாா் (52). இவா், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். எம்.கே.பி. நகரில் இருந்து கோயம்பேடு செல்லும் மாநகரப் பேருந்து 46ஜி-இல்

ஜெகன்குமாா் வியாழக்கிழமை பணியில் இருந்தாா். அந்தப் பேருந்து அமைந்தகரை அண்ணா வளைவு அருகே சென்றபோது, பேருந்தில் இருந்த பயணி வேலூா் மாவட்டம், மாதனூா் கருமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வெ.கோவிந்தன் (53) என்பவரிடம் பயணச்சீட்டு எடுக்குமாறு நடத்துநா் ஜெகன்குமாா் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவா் தாக்கிக்கொண்டனா். கோவிந்தன் தாக்கியதில் ஜெகன்குமாா் பலத்த காயமடைந்தாா். இதைப் பாா்த்த ஓட்டுநா், பேருந்தை நிறுத்தினாா். இதையடுத்து பயணிகளும் பொதுமக்களும் பலத்த காயமடைந்த ஜெகன்குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஜெகன்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதையும் படிக்க |2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம்: தவெக தலைவர் விஜய்!

தகவல் அறிந்து ஒட்டுமொத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்களும் பாதி வழியிலேயே பேருந்தை நிறுத்தியதால் போக்குவத்து நெரிசல் காணப்பட்டது.

அதேவேளையில் காயமடைந்த கோவிந்தனும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், சென்னை மாநகரப் பேருந்து நடத்துநர் ஜெகன்குமார் உயிரிழந்த விவகாரத்தில் கைதான பயணி கோவிந்தன் மீது அமைந்தகரை போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த நடத்துநர் ஜெகன்குமாருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்!

சாலை விபத்தில் உயிரிழந்த வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் ரூ.25 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

அரசுப்பேருந்து நடத்துநர் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்!

பணியின்போது உயிரிழந்த அரசுப்பேருந்து நடத்துநரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவியை அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு:சென்னை ... மேலும் பார்க்க

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தர்னா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் பகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ... மேலும் பார்க்க

சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக புதுச்சேரி பாஜக எம்.பி. அவகாசம்

புதுச்சேரி: ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.செல்வகணபதி 3 மாதம் அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.புதுச்சேரி பாஜக தலைவரும் புதுச்சேரி ம... மேலும் பார்க்க

இனியாவது மதுக்கடைகளை மூடுமா திமுக அரசு?: ராமதாஸ் கேள்வி

மதுவிலக்கு அதிகாரம் மாநில அரசுகளுக்கு மட்டுமே இருப்பதாகவும், இதில் மத்திய அரசு தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இனியாவது மதுக்கடைகளை மூடுமா திமுக அரசு? என பாமக நிறுவ... மேலும் பார்க்க

நத்தம் அருகே புளிய மரத்தில் அரசுப் பேருந்து மோதி விபத்து: 30-க்கும் மேற்பட்டோர் காயம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே புளிய மரத்தில் அரசுப் பேருந்து மோதி விபத்துத்துக்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோட்டப்பட்டியில் இருந்து 40-க்கு... மேலும் பார்க்க