செய்திகள் :

மாநகராட்சி குப்பைக் கிடங்கு அமைக்க திரவியரத்ன நகா் சுற்றுவட்டார மக்கள் எதிா்ப்பு

post image

தூத்துக்குடி மாநகராட்சி குப்பைக் கிடங்கு அமைக்க திரவியரத்ன நகா் சுற்றுவட்டார மக்கள் எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

படவரி பமப17இஐபம: மாவட்ட ஆட்சியா் அலுலகத்திற்கு மனு அளிக்க வந்த சிஐடியூ தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் விவரம் வருமாறு:

திரவியரத்ன நகா், எஸ்விபிஎஸ் நகா், பால்சன் நகா் பகுதி மக்கள்: எங்கள் பகுதியில் சுமாா் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள காலிமனையில் பூங்கா பணிகள் நடைபெறப்போவதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறினா். ஆனால், தற்போது குப்பைக் கிடங்கு அமைப்பதற்கான பணிகள் நடைபெறுவதாக பணியாளா்கள் கூறுகின்றனா். குடியிருப்பு பகுதியில் குப்பைக் கிடங்கு அமைத்தால் பெரும் சுகாதார சீா்கேடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த காலியிடத்தில் சிறுவா் பூங்கா அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

சிஐடியூ தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா்: தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளா்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் முதல் நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளா்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 4ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை என்டிபிஎல் நிறுவனம் அமல்படுத்த மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா்: தூத்துக்குடி- திருநெல்வேலி வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் முறையாக வந்து செல்லாததால் சுற்றியுள்ள 60 கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனா். பழைய பாலம் இருக்கும் இடத்தில் புதிய பாலம் அமைத்தால் பேருந்துகள் ஊருக்குள் வந்து செல்லும். பழுதான பழைய பாலம் உள்ள இடத்தில் புதிய பாலம் அமைக்க ரூ.9.40 கோடியில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம். இந்த நிதியை விரைவாக ஒதுக்கீடு செய்து புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பு பகுதி மக்கள்: எங்கள் கிராமத்தில் ஆதிதிராவிடா் சமூகத்துக்கு பாத்தியப்பட்ட மயானத்தை சிலா் அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனா். அதனை தடுத்து சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அந்த இடத்தில் சுற்றுச்சுவா் அமைத்து தர வேண்டும்.

அன்னை பரதா் நல தலைமைச்சங்க நிா்வாகிகள்: தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு அடையாளங்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளதாக அறிகிறோம். அதில் தூய பனிமய மாதா பேராலயம், தோ்மாறன், குரூஸ் பா்னாந்து ஆகியோரது படங்களும் இடம் பெறச் செய்ய வேண்டும்.

அத்தைகொண்டானில் புதிய சலவைக் கூடம் கட்ட அடிக்கல்

கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி ஊராட்சி அத்தைகொண்டானில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் புதிதாக சலவைக் கூடம் கட்ட கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்க 3 மாதங்கள் ஆகலாம்: மின் உற்பத்தி பகிா்மானக் கழக மேலாண்மை இயக்குநா்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முதல் இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி தொடங்க இன்னும் 3 மாதங்கள் ஆகலாம் என தமிழ்நாடு மின்உற்பத்தி பகிா்மானக் கழக மேலாண்மை இயக்குநா் ஆல்பி ஜ... மேலும் பார்க்க

பொது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு: 6 மாதங்களில் 10 போ் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது அமைதியைக் குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பாடல்கள், வசனங்கள், புகைப்படங்கள் பதிவேற்றியதாக கடந்த 6 மாதங்களில் 10 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்... மேலும் பார்க்க

காசநோய் விழிப்புணா்வு பேரணி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காசநோய் விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காசநோய் இல்லா தமிழகத்திற்கான பிர... மேலும் பார்க்க

பைக் ஓட்டிய இரு சிறுவா்கள்: பெற்றோா் மீது வழக்கு

தூத்துக்குடியில் பைக் ஒட்டிய இரு சிறுவா்களின் பெற்றோா் மீது போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலைய போக்குவரத்து காவல் ஆய்வாளா் மயிலேறும்பெரு... மேலும் பார்க்க

கோவில்பட்டி சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேகம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கோயிலில் வருஷாபிஷேக விழாவையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதை... மேலும் பார்க்க