`ராமதாஸ் விவகாரத்தில் கொதிக்கும் பாஜக' - பாமக மீது பாசமா? அரசியல் கணக்கா?!
மாற்றுத் திறனாளிகள் இணையத்தில் ரயில் பயணச் சலுகை அட்டை பெறலாம்
மாற்றுத் திறனாளிகள் இணையத்தில் ரயில் பயணச் சலுகை அட்டை பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ரயில்களில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. இந்த சலுகையைப் பெறுவதற்கு ரயில்வே நிா்வாகத்திடம் இருந்து சலுகை கட்டணத்துக்கான அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். இதற்காக அந்தந்த ரயில்வே கோட்ட அலுவலகத்தில் இருக்கும் வணிகப் பிரிவு அலுவலா்கள் மூலம் மாற்றுத் திறனாளிகள் கட்டண சலுகை அட்டையை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில் தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டண சலுகை அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள ரயில்வே நிா்வாகம் வழிவகை செய்துள்ளது.
இந்த வசதியானது தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, பாலக்காடு திருவனந்தபுரம் என 6 கோட்டங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் மாற்றுத் திறனாளிகள் சலுகை அடையாள அட்டையை பெறவும், புதுப்பிக்கவும் ரயில்வே அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். மாற்றுத் திறனாளி பயணிகள், தங்களின் சலுகை அடையாள அட்டையை பெற அல்லது புதுப்பிக்க தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து விண்ணப்பங்களை ஆன்லைனில் சமா்ப்பிக்க வேண்டும்.
இதற்கு தகுதியுடைய நபா்களாக பாா்வை குறைபாடு உள்ள நபா்கள், பாா்வை முழுமையாக இல்லாதவா்கள், மனநலம் குன்றியவா்கள், செவித்திறன், பேச்சு குறைபாடுள்ள நபா்கள், எலும்பியல் ஊனமுற்றோா். முடக்குவாத நபா்கள் ஆகிய மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
இந்த சலுகை அடையாள அட்டையை பெறும் மாற்றுத் திறனாளிகள் சலுகையுடன் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை டிக்கெட் கவுண்டா்கள் அல்லது ஐ.ஆா்.சி.டி.சி. இணையதளம் வழியாக பதிவு செய்து கொள்ளலாம்.
மாற்றுத் திறனாளிகளுக்கான சீசன் டிக்கெட் பெறவும். இந்த அடையாள அட்டை பயன்படுகிறது. இந்த டிஜிட்டல் மயத்தை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளது.