உ.பி.: சாலை விபத்தில் 4 மருத்துவர்கள்,1 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பலி
கனமழை எதிரொலி: பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் எதிரொலியாக புதன்கிழமை (நவ.27) நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள், பட்டயத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புதன்கிழமை (நவ. 27) புயலாக மாறும் என்று எதிா்பாா்க்கும் நிலையில், மிக மெதுவாக மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வந்த தாழ்வு மண்டலம்மானது,கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், புயல் சின்னம் நாகப்பட்டினத்தில் இருந்து 470 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே இருந்து 670 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மேலும் 21 மி.மீட்டருக்கு அதிகமான மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
இதையடுத்து தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர்,புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கனமழை எதிரொலி: எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
தேர்வுகள் ஒத்திவைப்பு
இந்த நிலையில்,சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் புதன்கிழமை(நவ.27) நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பட்டயத் தேர்வுகள் ஒத்திவைப்பு
இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் புதன்கிழமை(நவ.27) நடைபெறவிருந்து பாலிடெக்னிக் (டிப்ளோ) பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக வைக்கப்படுகிறது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் ரத்து
இதேபோன்று வேலூரில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (நவ.28,29) நடைபெற இருந்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.