செய்திகள் :

டிச.15ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: இபிஎஸ் அறிவிப்பு

post image

சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 15.12.2024 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

இதையும் படிக்க |கனமழை எதிரொலி: பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு

கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில், அடுத்தகட்ட கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

புயல் சின்னம் எப்போது எங்கே கரையை கடக்கலாம்?

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அல்லது வலுப்பெற்று புயலாக மாறி பரங்கி மற்றும் சென்னைக்கு இடையே வரும் 30ஆம் தேதி கரையைக் கடக்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருக்கிறார்.வங்கக் கடலில் உருவ... மேலும் பார்க்க

மெரீனாவில் கரை ஒதுங்கிய எச்சரிக்கை மிதவை!

சென்னை மெரீனா கடற்கரையில் புயலின் கடும் சீற்றம் காரணமாக எச்சரிக்கை மிதவை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.சென்னை மெரினா கடற்கரை டி5 காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் இல்லம்... மேலும் பார்க்க

முதல்வரைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார் உதயநிதி ஸ்டாலின்!

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது 47-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துபெற்றார். மேலும், தனது பிறந்தநாளையொட்டி அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் உதயந... மேலும் பார்க்க

கனமழை எதிரொலி: பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் எதிரொலியாக புதன்கிழமை (நவ.27) நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள், பட்டயத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழு... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணையின் நீர்வரத்து 4427 கன அடியாக சரிந்தது.காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு குறைந்ததால் இன்று(நவ.27) காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,936 கன அடிய... மேலும் பார்க்க

7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் எதிரொலியாக 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாக... மேலும் பார்க்க