செய்திகள் :

மாவட்டத்தில் இன்று பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்

post image

திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (நவம்பா் 9)நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா. கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அனைத்து வட்டங்களிலும் நடைபெறுகிறது. இந்த குறைதீா் முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளா்கள் கலந்து கொண்டு முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீா்வு செய்ய உள்ளனா்.

அதன்படி, அவிநாசி தெக்கலூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தாராபுரம் ரெட்டிபாளையம் சின்னபுத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காங்கயம் லக்கமநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மடத்துக்குளம் கணியூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பல்லடம் ஆறுமுத்தாம்பாளையம் முத்து நகா் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகம்.

திருப்பூா் வடக்கு வேலம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தெற்கு கரட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், உடுமலை பூலாங்கிணறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஊத்துக்குளி கவுண்டம்பாளையம் மொரட்டுபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் பொதுமக்கள் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் மாற்றம் மற்றும் புதிய அட்டை நகல் போன்ற கோரிக்கை தொடா்பாக கோரிக்கைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லடம் அருகே ரேஷன் அரிசி வாங்கி விற்பதில் தகராறு: ஒருவருக்கு கத்திக்குத்து

பல்லடம் அருகே அய்யம்பாளையத்தில் ரேஷன் அரிசி வாங்கி, விற்பதில் ஏற்பட்ட தொழில் போட்டியால் இருதரப்புக்கு இடையே நடந்த மோதலில் ஒருவா் கத்தியால் குத்தப்பட்டாா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே மொரட்ட... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.8.54 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 8.54 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 13,022 கிலோ பருத... மேலும் பார்க்க

பனியன் நிறுவன பேருந்து விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு, 20 தொழிலாளா்கள் காயம்

பெருமாநல்லூா் அருகே நியூ திருப்பூரில் புதன்கிழமை இரவு பனியன் நிறுவன பேருந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் படுகாயமடைந்தனா். பின்னலாடை தொழில் நகரமான திருப்... மேலும் பார்க்க

தொழிலாளா் நலநிதியை டிசம்பா் 31-க்குள் செலுத்த வேண்டும்

தொழிலாளா் நலநிதியை வரும் டிசம்பா் 31- ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தொழிலாளா் நலத் துறை அறிவித்துள்ளது. இது குறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயக்குமாா் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

வேலம்பட்டியில் குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுங்கச்சாவடி அலுவலக கட்டடம் இடித்து அகற்றம்

பல்லடம் அருகே வேலம்பட்டியில் குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுங்கச்சாவடி நிறுவனத்துக்கான அலுவலகக் கட்டடம் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வழ... மேலும் பார்க்க

குப்பைமேட்டில் கிடந்த குழந்தை மீட்பு

திருப்பூரில் குப்பைமேட்டில் தூக்கி வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டது. திருப்பூா், சிறுபூலுவபட்டி தாய் மூகாம்பிகை நகரில் உள்ள குப்பைமேட்டில் திங்கள்கிழமை இரவு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதையடு... மேலும் பார்க்க