செய்திகள் :

மிகப்பெரிய முடிவை எடுத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி: ஏக்நாத் ஷிண்டே!

post image

நாங்கள் இவ்வளவு பெரிய முடிவை எடுத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று சிவசேனை தலைவர்(ஷிண்டே அணி) ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, இன்று காலை பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மகாராஷ்டிர முதல்வராக (சட்டப்பேரவை பாஜக தலைவராக) தேவேந்திர ஃபட்னவீஸ் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் ,கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாருடன் சென்று, மும்பையில் உள்ள ராஜ்பவனில் மகாராஷ்டிர ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதையும் படிக்க: வகுப்பறையில் பின்வரிசை மாணவர்.. ஃபட்னவீஸ் பற்றி ஆசிரியர் பகிர்ந்த சுவாரசியம்!

இதனைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

இரண்டரை ஆண்டுகள் ஆட்சியமைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த 2.5 ஆண்டுகளில் மகாயுதி கூட்டணியில் உள்ள மூவரும் செய்த அரசுப் பணிகள் குறிப்பிடத்தகுந்தவை. இவை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை. நாங்கள் இவ்வளவு பெரிய முடிவை எடுத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று பேசினார்.

மகாராஷ்டிர முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் நாளை(டிச. 8) பதவியேற்கிறார். துணை முதல்வர் பதவி ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜீத் பவாருக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

சுக்பீர் சிங் பாதல் செல்லும் குருத்வாராவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

அனந்தபூர் சாஹிப்பில் உள்ள சீக்கிய கோயிலில் சுக்பீர் சிங் பாதல் இன்று செல்லவிருப்பதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு ... மேலும் பார்க்க

உயர்கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால்: ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை

நமது நிருபர்உயர் கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று மக்களவையில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் தெரிவித்தார்.இந்திய பல்கலைக்கழக... மேலும் பார்க்க

ஆன்லைன் செயலி மூலம் மருந்துகள் விநியோகம் செய்ய திமுக எம்.பி. எதிர்ப்பு

நமது நிருபர்"ஸ்விகி' உள்ளிட்ட உணவு விநியோக நிறுவனங்கள் மருந்துகள் விற்கும் செயல்பாடுகளை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினரும் மருத்துவருமான கனிமொழி என்... மேலும் பார்க்க

தகுதிவாய்ந்தவர்களுக்கு குடும்ப அட்டைகள்: மத்திய அமைச்சர் விளக்கம்

நமது நிருபர்தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு மட்டுமே குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உண... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருமா?

நமது நிருபர்மூத்த குடிமக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் கரோனா காலத்தின்போது இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் கட்டணச் சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருமா என்று மக்களவையில் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உற... மேலும் பார்க்க

"டெலிவரி' ஊழியர்களுக்கு பி.எஃப்., காப்பீடு: ஆன்லைன் முன்னணி நிறுவனம் மறுப்பதாக எம்.பி.புகார்

நமது நிருபர்இணைய வழி டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்), காப்பீடு உத்தரவாதத்தை முன்னணி நிறுவனம் மறுத்து வருவதாக மக்களவையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூ... மேலும் பார்க்க