செய்திகள் :

மிட்செல் மார்ஷுக்கு பதிலாக இவர்..! முன்னாள் வீரரின் திடமான கருத்து!

post image

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸி. மோசமான தோல்வியை சந்தித்தது.

ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுன்டர் மிட்செல் மார்ஷுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நூறு சதவிகிதம் விளையாடமுடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ஷ் பந்துவீசினார். ஆஸி. அணிக்கு அதுவும் பெரிதாக பலனளிக்கவில்லை என்பது வருத்தமான செய்தி.

2 வருடமாக சராசரி 50 உடன் ஷெஃபீல்டு ஷீல்டில் 303 ரன்கள், 9 விக்கெட்டுகள் அசத்தியுள்ளார் வெப்ஸ்டர்.

அடுத்த டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிச.6ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் மிட்செல் மார்ஷுக்கு பதிலாக டாஸ்மானியன் பகுதியைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் பியூ வெப்ஸ்டரை தேர்வு செய்யலாம் என முன்னாள் விக்கெட் கீப்பர் ஐயன் ஹீலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐயன் ஹீலி பேசியதாவது:

மார்ஷுக்கு பதிலாக வெப்ஸ்டரை அணியில் எடுக்க வேண்டும். மாற்றுவீரராக அல்லாமல் அனைத்து போட்டியிலும் விளையாடும்படி தேர்வு செய்ய வேண்டும். 12ஆவது வீரராக தேர்வு செய்வதைவிட பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும். இல்லையெனில் தேர்வாகாமல் இருப்பது நல்லது.

போலண்டுக்கு பதிலாக வெப்ஸ்டரை தேர்வு செய்யலாம். 2 மீட்டர் உயரம் கொண்டவர். இளைஞர்கள், 2ஆவது லெவன், ஆஸி. ஏ, ஷீல்டு லெவலில் சிறப்பாக விளையாடியுள்ளார். சிறந்த ஆல்ரவுண்டராக தொடர்ச்சியாக விளையாடியுள்ளார். குறிப்பாக அழுத்தமான நேரங்களில் சரியாக விளையாடியுள்ளார்.

மார்ஷ் குணமடைந்தால் டாப் ஆர்டரில் விளையாடலாம். அடுத்து ஆல்ரவுண்டராக வெப்ஸ்டர் விளையாடலாம் என்றார்.

கடைசி ஒருநாள்: சதம் விளாசிய கம்ரான் குலாம்; ஜிம்பாப்வேவுக்கு 304 ரன்கள் இலக்கு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் எடுத்துள்ளது.பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கட... மேலும் பார்க்க

கேன் வில்லியம்சன் அரைசதம்; முதல் நாளில் நியூசி. 319 ரன்கள் குவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் எடுத்துள்ளது.இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண... மேலும் பார்க்க

ஆஸி. பிரதமரை சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்..!

ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனேசியை இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் 1-0 என... மேலும் பார்க்க

2ஆவது டெஸ்ட்: ஆஸி. அணி அறிவிப்பு..! அறிமுகமாகும் வரலாற்று நாயகன்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸி. மோசமான தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் டிச.6ஆம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட... மேலும் பார்க்க

7 மே.இ.தீவுகள் அணி வீரர்கள் சிஎஸ்கே முகாமில் பயிற்சி!

சென்னை சூப்பர் கிங்ஸ் முகாமில் 7 மே.இ. தீவுகள் அணியின் வீரர்கள் வரும் டிச.1 முதல் 14ஆம் தேதி வரை பயிற்சி மேற்கொள்ளவிருப்பதாக சிடபிள்யூஐ (மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம்) அறிவித்துள்ளது. சிடபிள்... மேலும் பார்க்க

பேராசை பிடித்தவர்கள் இந்திய ரசிகர்கள்..! கோலிக்கு ஆதரவாக முன்னாள் வீரர் கருத்து!

இந்தியாவின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி 500 நாள்களாக சதமடிக்காமல் இருந்து, ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 2ஆவது இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்தினார். 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.இதன்... மேலும் பார்க்க