Aarav Studios: ``இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகள்'' - தயாரிப்பாளராகும் பிக்பாஸ்...
மீண்டும் ஏறிய தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா? காரணம் என்ன?

இன்று தங்கம் விலை மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஆனால், நேற்று காலையில் பவுனுக்கு ரூ.1,800 என அதிரடியாக குறைந்த தங்கம் விலை, மதியம் மீண்டும் ரூ.1,600 உயர்ந்தது. நேற்று மதியம் உயர்ந்த தங்கம், வெள்ளி விலையில் தான் தற்போதும் தொடர்கிறது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,300 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.90,400 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.165 ஆக விற்பனை ஆகி வருகிறது.

சர்வதேச சந்தையில் ஏன் மீண்டும் தங்கம், வெள்ளி விலை உயர்கிறது என்பது குறித்து பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் விளக்குகிறார்.
"அமெரிக்க அரசு நிர்வாகம் மூடல் தொடர்ந்து வருகிறது.
அமெரிக்க அரசாங்கத்தின் கடன் அளவு தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது.
மேலும், நேற்று நடந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பிலுமே பெரிய முன்னேற்றங்கள் எதுவும் ஏற்பட்டுவிட இல்லை
- இத்தகைய காரணங்களாக அச்சங்கள் மீண்டும் சந்தையில் தலைத்தூக்க தொடங்கியுள்ளது. இதனால் தான், இந்த விலை ஏற்றம்".



















