Modi-க்கு எதிர்க்கட்சி; Edappadi Palanisamy-க்கு சொந்த கட்சி... சோதனை மேல் சோதனை...
மீண்டும் சென்னை அணியில் ‘சுட்டிக்குழந்தை’ சாம் கரண்!
இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் சாம் கரணை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஏலத்தில் எடுத்துள்ளது.
ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று (நவம்பர் 24) தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இன்றும் விறுவிறுப்பாக ஏலம் நடைபெற்று வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவிச்சந்திரன் அஸ்வின், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா (ரைட் டூ மேட்ச்), ராகுல் திரிபாதி ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து வீரர் சாம் கரணை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2.40 கோடிக்கு எடுத்துள்ளது.
சாம் கரண் 2022 சீசனைத் தவிர்த்து, 2019 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல்லின் எல்லா சீசனிலும் விளையாடியுள்ளார். அவரது முதல் சீசனில், 9 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் உள்பட 95 ரன்கள் எடுத்தார். மேலும், 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
2020 சீசனில் சென்னை அணிக்காக 186 ரன்கள் மற்றும் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2021 இல், அவர் 9 போட்டிகளில் விளையாடி 56 ரன்கள் எடுத்ததோடு, 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.
சாம் கரண் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் பஞ்சாப் அணியால் ரூ.18.5 கோடிக்கு வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.