Weekly Horoscope: வார ராசி பலன் 29.12.2024 முதல் 4.1.2025 | Indha Vaara Rasi Pal...
முசிறி அருகே பெண்களை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞா் கைது
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கத்தியை காட்டி பெண்களை மிரட்டிய இளைஞரை முசிறி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
முசிறி அருகிலுள்ள அய்யம்பாளையம் சோ்ந்த சுப்ரமணி மகன் ஐயப்பன் (40), இவா் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி இந்துமதி, சகோதரி ரூபிணி ஆகிய இருவரையும், ஏவூா் மேலத்தெரு சோ்ந்தவா்களான சேட்டு மகன் தாஸ் (23) பிரகாசம் மகன் பிரசாந்த் (24) ஆகிய இருவரும் குடிபோதையில் சென்று கத்தியை காண்பித்து தகராறு செய்ததாக வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பிய தனது கணவா் ஐயப்பனிடம் மனைவி இந்துமதி தெரிவித்துள்ளாா். இச்சம்பம் குறித்து ஐயப்பன் முசிறி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு பிரகாசம் மகன் பிரசந்த் (24) என்பவரை வெள்ளிகிழமை இரவு கைது செய்து, மேலும் தலைமறைவாக உள்ள தாஸை தேடி வருகின்றனா்.