முதியோர்களுக்கு இலவச சிகிச்சை: ஆம் ஆத்மி அதிரடி!
தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தபிறகு வயதான முதியோர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் அதிரடி திட்டத்தை புதன்கிழமை அறிவித்தார்.
தலைநகர் தில்லியில் 2025 பிப்ரவரி மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னரே ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றது. இதோடு இன்று முதியோர்களுக்கான புதிய அறிவிப்பை ஒன்றையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் வகையில் 'சஞ்சீவ்னி யோஜ்னா' தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கான பதிவு இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குள் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார். ங்