செய்திகள் :

மும்பை: தொடர் ரயில் குண்டுவெடிப்பு; 12 குற்றவாளிகளை விடுவிக்கும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!

post image

மும்பையில் 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி 7 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 180 பேர் வரை உயிரிழந்தனர். 700 பேர் காயம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக்குண்டு வெடிப்பு வழக்கு மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

2015 ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா ஒழுங்கிணைந்த குற்ற தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பைசல் ஷேக், ஆசிப் கான், கமல் அன்சாரி, எஹ்தேஷாம் சித்துகி மற்றும் நவீத் கான் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தது. மேலும் ஏழு குற்றவாளிகளான முகமது சாஜித் அன்சாரி, முகமது அலி, டாக்டர் தன்வீர் அன்சாரி, மஜித் ஷாஃபி, முஸ்ஸாமில் ஷேக், சோஹைல் ஷேக் மற்றும் ஜமீர் ஷேக் ஆகியோருக்கு சதித்திட்டத்தில் ஈடுபட்டதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இத்தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்

அதிர்ச்சி அடைந்த மாநில அரசு

இதனை விசாரித்த நீதிமன்றம், அரசு தரப்பு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றத்தை சரிவர ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை என்றும், குற்றவாளிகள் குற்றத்தை செய்தார்கள் என்று நம்பும்படியாக இல்லை என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களை சித்ரவதை செய்து வாக்குமூலம் வாங்கி இருப்பதாக தனது தீர்ப்பில் தெரிவித்து, 12 பேரையும் விடுதலை செய்து கடந்த செவ்வாய் கிழமை உத்தரவிட்டது. இந்த உத்தரவு மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து அவசரமாக சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது. இம்மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். எனினும் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் மும்பை ரயில் குண்டு வெடிப்பில் குற்றவாளிகளை விடுதலை செய்து மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.கோடிஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, ``உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஒரு முன்னுதாரணமாகக் கருத முடியாது” என்று கூறி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்வதை நீதிமன்றம் நிறுத்தி வைக்கவில்லை. அவர்கள் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டு இருந்தால் அவர்களை மீண்டும் கைது செய்யவேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பொம்மையே வாழ்க்கை துணை... 4-வது பொம்மை குழந்தையை வரவேற்கும் இளைஞர் - பின்னணி என்ன?

கொலம்பியாவைச் சேர்ந்த கிறிஸ்டியன் மொன்டெனேக்ரோ, தனிமையில் இருந்து விடுபட, 2023 ஆம் ஆண்டு நடாலியா என்ற துணிப்பொம்மையுடன் உறவைத் தொடங்கினார். இவர்களுக்கு மூன்று பொம்மைக் குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவிக... மேலும் பார்க்க

’அமெரிக்காவை விட இந்தியாவில் தான்..’ கவனம் பெற்ற அமெரிக்க பெண்ணின் வீடியோ - பின்னணி என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த சமூக ஊடக பதிவாளர் கிறிஸ்டன் ஃபிஷர், இந்தியாவில் தனது அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்து பேசியிருக்கிறார். இந்தியாவில் தனது அன்றாட வாழ்க்கையையும் அனுபவங்களையும் சமூ... மேலும் பார்க்க

இங்கிலாந்து: திரையரங்கில் பவன் கல்யாண் திரைப்படக் காட்சி நிறுத்தம்: என்ன நடந்தது?

பவன் கல்யாண் நடித்த வரலாற்று காவிய திரைப்படமான ஹரி ஹர வீர மல்லு ஜூலை 26 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் அவரது ரசிகர் பட்டாளத்தால் பெரும் ஆரவாரத்தைப் பெற்றது. இந்த கொண்டாட்டங... மேலும் பார்க்க

US: சிலந்தி கடித்ததால் சிறுநீரகம் செயலிழப்பு; உயிருக்கு போராடும் 16 வயது சிறுவன்!

அமெரிக்காவின் அயோவாவில் 16 வயது சிறுவனுக்கு சிலந்தி கடித்து தொற்று ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அயோவாவின் ஸ்லேட்டர் பகுதியைச் சேர்ந்த நோவா ஜான்ச... மேலும் பார்க்க

Sundar Pichai: சொத்து மதிப்பு 9000 கோடியாக உயர்வு; வியக்க வைக்கும் சுந்தர் பிச்சையின் வளர்ச்சி!

ஆல்பபெட் தலைமைச் செயல் அதிகாரியான (ceo) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக கடந்த 2015-ல் பொறுப்பேற்ற சுந்தர் பி... மேலும் பார்க்க

"ரூ.5000 டு ரூ.46 லட்சம் சம்பளம்; என் அம்மாதான் எனக்கு ஹீரோ" - தாயின் தியாகம் குறித்து நெகிழும் மகன்

தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், தான் மாதம் ரூ. 5,000 சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்ததிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆண்டுக்கு ரூ. 46 லட்சம் உயர்ந்திருப்பதாகவும், தன்னுடைய இந்த வளர்ச்சியில் தனது... மேலும் பார்க்க