செய்திகள் :

'யாராக இருந்தாலும் கைதுசெய்ய வேண்டும்!' - அண்ணா பல்கலைக்கழகச் சம்பவம் குறித்து திருமாவளவன் பேச்சு

post image

கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொந்தரவிற்கு உள்ளானது, தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் குறித்து சென்னை விமான நிலையத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவனிடம் பேசியுள்ளார். அதில், "தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அவ்வப்போது நடந்துள்ள சூழலில், அவர்களுக்கான பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்பது விசிக-வின் கோரிக்கை.

இது குறித்து தமிழ்நாடு அரசுக்கு அவ்வப்போது நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கிறோம்... வேண்டுகோள் வைத்துள்ளோம். அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்துள்ள பாலியல் வல்லுறவு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும்கூட, அந்த குற்றச்செயல் பெரும் வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

யாராக இருந்தாலும்...

பள்ளி மற்றும் கல்லூரி வளாக விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் தவிர்த்து வேறு சிலரும் ஈடுபட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் உள்ளது. அதனால், அரசும், காவல்துறையும் நேர்மையான முறையில் விசாரணை செய்து குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும்.

கைது செய்யப்பட்ட நபருக்கு உடனடியாக பிணை வழங்கக் கூடாது. அவர் சிறையில் இருக்கும்போதே விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Canada: பதவி விலகுகிறாரா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ? - பரபரக்கும் தகவல்கள்... என்ன நடக்கிறது அங்கே?

கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்யவிருக்கிறார் எனத் தகவல் பரவிவருகிறது. இது குறித்து அவர் உறுதியான முடிவை எடுக்கவில்லை எனினும், ராஜினாமா செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ராய்டர்ஸ... மேலும் பார்க்க

ஆளுநர் R N Ravi Vs DMK மீண்டும் மோதல், TN Assembly-ல் நடந்தது என்ன? | Imperfect show | Vikatan

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* - வந்தார்... சென்றார் ஸ்பூஃப்.* - TN சட்டமன்றம்: "யார் அது சார்?" சட்டையில் அச்சிடப்பட்ட மேற்கோள், அதிமுகவுடன்?* - ஆளுநர் உரை: ஆளுநர் உரை நிகழ்த்தாமல் பேரவைக்கு வந்து வ... மேலும் பார்க்க

`அதிஷி தனது தந்தையையே மாற்றிவிட்டார்' - பாஜக வேட்பாளர் மீண்டும் சர்ச்சை... அழுத டெல்லி முதல்வர்

ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் டெல்லியில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தகைய சூழலில், கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் எம்.பி டேனிஷ் அலிக்கெதிராக வகுப்புவாத கரு... மேலும் பார்க்க

`திமுக ஓட்டை விழுந்த கப்பல் ஆகிவிட்டது...' - செல்லூர் ராஜூ விமர்சனம்

"கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியதற்கு திமுக-வின் நாளிதழான முரசொலியில் முக்கால் பக்கம் ஒப்பாரி வைத்துள்ளனர்..." என்று செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார்.கே.பாலகிருஷ்ணன்மதுரை புதுவிளாங்குடி பகுதிய... மேலும் பார்க்க