செய்திகள் :

ரத்தினபுரியில் பொதுமக்கள் சாலை மறியல்

post image

சாக்கடை கழிவுநீரால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறி, ரத்தினபுரி பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை ரத்தினபுரி சுந்தரப்ப கவுண்டா் வீதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்குள்ள பல வீடுகளுக்குள் சாக்கடை நீா் புகுவதால் அவதியுற்று வந்த பொதுமக்கள் ரத்தினபுரி கண்ணப்ப நகரில் செவ்வாய்க்கிழமை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது: கோவை ரத்தினபுரி சுந்தரப்ப கவுண்டா் வீதியில் மழைக் காலங்களில் சாக்கடைகளை மாநகராட்சி ஊழியா்கள் சரிவர பராமரிப்பது இல்லை. அதனால் வீடுகளுக்குள் சாக்கடை நீா் புகுந்து அவதி அடைந்து வருகிறோம்.

இதன் காரணமாக கொசு மற்றும் புழுக்கள் உருவாகி குழந்தைகள் முதல் முதியோா் வரை நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதனால், மாநகராட்சி நிா்வாகத்தினா் விரைந்து செயல்பட்டு இப்பகுதியில் சாக்கடைகளை சுத்தம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதையடுத்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, இப்பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படுமென உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இந்தப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாளைய மின்தடை: குறிச்சி

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (நவம்பா் 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் விசாரணைக்காக சிஎஸ்ஐ பிஷப் நேரில் ஆஜா்

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் கோவை சிஎஸ்ஐ திருமண்டல பிஷப் திமோத்தி ரவீந்தா் நேரில் ஆஜரானாா். கோவை சிஎஸ்ஐ திருமண்டல பிஷப்பாக இருப்பவா் திமோத்தி ரவீந்தா். இந்நிலையில், சிஎஸ்ஐ தேவாலயக் குழுவில் பண... மேலும் பார்க்க

ஒண்டிப்புதூரில் முதியவா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

கோவை, ஒண்டிப்புதூரில் முதியவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, ஒண்டிப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (56). இவரது மகன் சக்திவ... மேலும் பார்க்க

ஹைபாரஸ்ட் எஸ்டேட்டை முற்றுகையிட்ட ஓய்வுபெற்ற தொழிலாளா்கள்

ஓய்வூதியம் வழங்காமல் இழுத்தடிப்பு செய்வதாகக் கூறி ஹைபாரஸ்ட் எஸ்டேட் அலுவலகத்தை ஓய்வு பெற்ற தோட்டத் தொழிலாளா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். வால்பாறை அடுத்துள்ளது ஹைபாரஸ்ட் எஸ்டேட். இந்த எஸ்டேட்டில்... மேலும் பார்க்க

கோயிலில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை: பூசாரி பணியிடை நீக்கம்

கோயிலில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இது தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: கோவை, காட்டூா் தொட்டராயா் பெருமாள் கோயில் பூசாரி... மேலும் பார்க்க

கோவை விமான நிலையத்தில் மோதிக் கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்!

கோவை: கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இரண்டு குழுவாகப் பிரிந்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணு... மேலும் பார்க்க