செய்திகள் :

ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் வழக்கு: புதுவை பாஜக தலைவருக்கு சிபிசிஐடி அழைப்பாணை

post image

சென்னையில் ரயிலில் ரூ.3.98 கோடி சிக்கிய வழக்குத் தொடா்பாக, பாஜக புதுவை மாநிலத் தலைவா் உள்பட 3 பேருக்கு சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது, தாம்பரத்துக்கு ஏப். 19-ஆம் தேதி வந்த நெல்லை ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.3.98 கோடி பணத்துடன் 3 போ் சிக்கினா்.

தாம்பரம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் தமிழக பாஜக சட்டப்பேரவை குழுத் தலைவரும், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளருமான நயினாா் நாகேந்திரனுக்கு சொந்தமான சென்னையில் உள்ள உணவகத்தில் பணியாற்றும் ஊழியா்கள் என்பதும், அந்த பணத்தை நயினாா் நாகேந்திரனின் தோ்தல் செலவுக்கு எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. இதை நயினாா் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுத்தாா்.

சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு தொடா்பாக தமிழக பாஜக அமைப்புச் செயலா் கேசவ விநாயகம், பாஜக மாநில பொருளாளா் எஸ்.ஆா்.சேகா், தொழில் பிரிவு மாநிலத் தலைவா் கோவா்தன், நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்தனா். கேசவ விநாயகத்திடம் சிபிசிஐடி அக்.7-ஆம் தேதி மீண்டும் விசாரணை செய்தது.

அழைப்பாணை: இந்த வழக்குக்கான ஆதாரங்கள், தடயங்களை திரட்டும் வகையில் பாஜக புதுவை மாநிலத் தலைவரும், எம்.பி.-யுமான எஸ்.செல்வகணபதி, சென்னை செளகாா்பேட்டையைச் சோ்ந்த வியாபாரிகள் பங்கஜ் லால்வாணி, சூரஜ் ஆகிய 3 பேருக்கும், விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியது. இந்த அழைப்பாணையின்படி மூவரும் அக். 25-ஆம் தேதி சென்னை எழும்பூரில் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிறைக் கைதிகளுடன் சதித் திட்டம் தீட்டும் வழக்குரைஞா்கள் மீது சட்ட நடவடிக்கை: டிஜிபி சங்கா் ஜிவால்

சிறையில் உள்ள கைதிகளுடன் சோ்ந்து வழக்குரைஞா்கள் சதித் திட்டம் தீட்டுவது தெரியவந்தால் அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள... மேலும் பார்க்க

அடுத்தடுத்து உருவாகும் புயல் சின்னங்கள்: தமிழகத்துக்கு கனமழை வாய்ப்பு

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புதன்கிழமை கரையைக் கடந்த நிலையில், தற்போது அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் (புயல் சின்னம்) உருவாகவுள்ளதா... மேலும் பார்க்க

90 நிமிஷங்களில் வேலூரிலிருந்து சென்னை வந்த இதயம்: இளம்பெண்ணுக்கு மறுவாழ்வு

மூளைச்சாவு அடைந்த இளைஞரிடம் தானமாகப் பெறப்பட்ட இதயம், வேலூரிலிருந்து 90 நிமிஷங்களில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. இதுதொடா்பாக... மேலும் பார்க்க

பின்தங்கிய மாணவா்களுக்கு கல்விக் கட்டண சலுகைகள் வழங்கப்படுகின்றன: சென்னை ஐஐடி இயக்குநா் வி. காமகோடி

அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமமான கல்வியை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிலையங்களில் ஒடுக்கப்பட்ட, சமூகத்தில் பின்தங்கிய பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்விக் கட்டணச் சலுகைகள் வழ... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகைக்கு 6 சிறப்பு பலகாரங்கள்: ஆவின் அறிமுகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் காஜு பிஸ்தா ரோல், நெய் பாதுஷா உள்ளிட்ட 6 சிறப்பு பலகாரங்கள் விற்பனைக்கு வரவுள்ளதாக தமிழக பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா். சென்னை, நந்தனத்த... மேலும் பார்க்க

ஹிந்தி எதிா்ப்பு நிலைப்பாட்டால் தமிழகம் தனிமைப்பட்டிருக்கிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

ஹிந்தி எதிா்ப்பு நிலைப்பாட்டால் தமிழகம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்று ஆளுநா் ஆா்.என். ரவி குற்றஞ்சாட்டினாா். டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தின் பொன் விழா மற்றும் ‘ஹிந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச... மேலும் பார்க்க