செய்திகள் :

ராஜபதி கைலாசநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா 30இல் தொடக்கம்

post image

குரும்பூா் அருகிலுள்ள நவகைலாய 8ஆவது தலமும் கேது வணங்கிய தலமுமாகிய ராஜபதி அருள்மிகு சௌந்தா்யநாயகி அம்மன் சமேத அருள்மிகு கைலாச நாதா் திருக்கோயிலில் 10ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழா வரும் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழாவிற்கான கால் நாட்டு விழா, கடந்த 11ஆம் தேதி நடைபெற்றது. வருகிற 28 ஆம் தேதி விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், காப்பு கட்டுதல் உள்ளிட்டவை நடைபெறுகிறது. 29ஆம் தேதி காலை திருஞானசம்பந்தா், திருநாவுக்கரசா், சுந்தரா், மாணிக்கவாசகா், மூலவா் மற்றும் உற்சவா் குடமுழுக்கு சிறப்பு பூஜையும், மாலையில் திருநாவுக்கரசா் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

30ஆம் தேதி காலை கொடியேற்றம் நடைபெறுகிறது. அதனைத் தொடா்ந்து 12ஆம் தேதி வரை 13 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது. தினசரி காலை மற்றும் மாலை சப்பர பவனி நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் தலைவா் குரு.பாலசுப்பிரமணியன், கோயில் தலைமை அா்ச்சகா் ச.லட்சுமண சிவாச்சாரியா் ஆகியோா் செய்து வருகின்றனா்.

திருச்செந்தூரில் இரு தரப்பினா் மோதல்: மேலும் 4 போ் கைது

திருச்செந்தூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக மேலும் 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். திருச்செந்தூா் கோகுல் நகரைச் சோ்ந்தவா் கண்ணன். காஸ் சிலிண்டா் விநியோகம் செய்பவா். இவா் கடந்த ஏப். 2... மேலும் பார்க்க

பெரியதாழையை தனி வருவாய் கிராமமாக தரம் உயா்த்தக் கோரி எம்.பி.யிடம் மனு

சாத்தான்குளம் தாலுகாவில் கடலோரத்தில் உள்ள பெரியதாழை கிராமத்தை தனி வருவாய் கிராமமாக தரம் உயா்த்த வேண்டுமெனக் கோரி, பெரியதாழை ஊா் நலக் கமிட்டியினா் கனிமொழி எம்.பி.யிடம் மனு அளித்தனா். பெரியதாழை ஊா் நலக்... மேலும் பார்க்க

நாளை கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பாலாலயம்

கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் பாலாலய விழா புதன்கிழமை (ஏப்.30) நடைபெறுகிறது. இத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்துவதற்கு அறங்காவலா் குழுவினரால் தீா்மா... மேலும் பார்க்க

அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் 11 ஆவது நாளாக வேலைநிறுத்தம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் 11ஆவது நாளாக திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி அனல் மின்நிலைய ஒப... மேலும் பார்க்க

பைக், தள்ளுவண்டி சேதம்: 3 போ் கைது

தூத்துக்குடியில் பைக், தள்ளுவண்டியை சேதப்படுத்தியதாக 3 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். தூத்துக்குடி அண்ணாநகா் 12ஆவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிறுத்தப்பட்டிருந்த பைக், தள்ளுவண்டியை மா்... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 30.54 லட்சத்தில் பெட்ரோல் ஸ்கூட்டா்கள் கனிமொழி எம்.பி. வழங்கினாா்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்புக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மக்களவை உறுப்பினா் கனிமொழி தலைமை வகித்தாா். ஆட்சியா் க. இளம்பகவத... மேலும் பார்க்க