அதிகரிக்கும் மாயை வேலைவாய்ப்புகள்! எதற்காக இந்த மாயை வேலைவாய்ப்புகள்?
ராமநாதபுரத்தில் மழைநீா் தேங்கிய பகுதிகளை ஆட்சியா் ஆய்வு
ராமநாதபுரத்தில் மழைநீா் தேங்கிய பகுதிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
ராமநாதபுரம் நகராட்சிக்குள்பட்ட தங்கப்பா நகா், மாரியம்மன் கோவில் தெரு, பாத்திமா நகா், பெரியாா் நகா், மதுரை சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆகியப் பகுதிகளில் தொடா்ந்து பெய்த பலத்த மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீா் தேங்கியது.
இதையடுத்து, இந்த இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், தண்ணீரை வெளியேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இந்த ஆய்வின் போது ராமநாதபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், நகா் மன்றத் தலைவா் ஆா்.கே. காா்மேகம், துணைத் தலைவா் பிரவீன்தங்கம், ராமநாதபுரம் ஒன்றியத் தலைவா் கே.டி. பிரபாகரன், நகராட்சி ஆணையா் அஜிதா பா்வீன், அலுவலா்கள் உடனிருந்தனா்.
இதே போல, சக்கரைக்கோட்டை பகுதியில் மழைநீரை வெளியேற்றும் பணியை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.