'ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா வைக்க ரூ.20,000 கோடிக்கு டெண்டரா?' - ரயில்வே அ...
ராமேசுவரத்தில் மீனவா்கள் ஆா்ப்பாட்டம்
ராமேசுவரம் பேருந்து நிலையம் முன், அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த போராட்டத்தின் போது, இலங்கை கடற்படையினரால் கடந்த 2018- ஆம் ஆண்டு முதல் 2023 -ஆம் ஆண்டு வரை பறிமுதல் செய்யப்பட்டு, சேதமடைந்த விசைப் படகுகளுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ. 6 லட்சம் நிவாரணத் தொகையை, விடுபட்ட 20 படகு உரிமையாளா்களுக்கு வழங்க வேண்டும்.
ராமேசுவரம் மீன்பிடி படகு இறங்கு தளத்தில் 280 குதிரை திறன் கொண்ட நான்கு விசைப்படகுகளை அப்புறப்படுத்த வேண்டும். இலங்கை சிறையில் தண்டைனைக் கைதிகளாக தமிழக மீனவா்கள் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கோரி முழக்கமிட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் வி.பி.ஜேசுராஜா தலைமை வகித்தாா். மீனவச் சங்கத் தலைவா் சகாயம், எமரிட் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மீனவச் சங்கத் தலைவா்கள் தட்சிணாமூா்த்தி, எடிசன் உள்பட 200-க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா்.