செய்திகள் :

ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது வழங்குவிழா - வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ரஸ்கின் பாண்ட்!

post image

தி நியூ இந்தியன் குழுமத்தின் சார்பில் நிறுவனர் ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள் இன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன.

விழாவின் தொடக்கமாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர் - மேலாண் இயக்குநர் மனோஜ் குமார் சொந்தாலியா வரவேற்றுப் பேசினார்.

தொடர்ந்து விழாவின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சின்மயா மிஷன் சா்வதேசத் தலைவா் பூஜ்ய சுவாமி ஸ்வரூபானந்தாஜி சிறப்புரையாற்றினார்.

விருது பெறுவோர் தெரிவு செய்யப்பட்ட முறை பற்றி விளக்கிய தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சாந்த்வானா பட்டாச்சார்யா, விருது பெறுவோர் பெயர்களை அறிவித்தார்.

அ-புனைவுக்கான பிரிவில் ‘ஹவ் பிரைம் மினிஸ்டா்ஸ் டிசைட்’ நூலுக்காக எழுத்தாளர் நீரஜா செளதுரிக்கு விருது வழங்கப்பட்டது.

புனைவுக்கான பிரிவில் ‘தி சென்ட் ஆஃப் ஃபாலன் ஸ்டாா்ஸ்’ நூலை எழுதிய ஐஸ்வா்யா ஜாவுக்கு விருது வழங்கப்பட்டது.

இலக்கியத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட்-க்கு வழங்கப்பட்டது.

விழாவில் பங்கேற்க வர இயலாத நிலையில் காணொலி வாயிலாகப் பேசினார் ரஸ்கின் பாண்ட். தொடர்ந்து, விருதினை அவருடைய பேத்தியான சிஷ்டி பாண்ட் பெற்றுக்கொண்டார்.

விருதுகள் பெற்றவர்கள் ஏற்புரை நிகழ்த்தினர்.

நிறைவில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைமைச் செயல் அலுவலர் லட்சுமி மேனன் நன்றி கூறினார்.

எழுத்துலகில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துவரும் படைப்பாளிகளைப் பெருமைப்படுத்தும் வகையில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (டிஎன்ஐஇ) குழுமம், ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

ஜம்மு-காஷ்மீரில் இத்தாலிய சுற்றுலாப் பயணி கைது

ஜம்மு-காஷ்மீரின் கதுவாவில் இத்தாலிய சுற்றுலாப் பயணி கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். இத்தாலியின் டோரினோவைச் சேர்ந்த சியாக்கா மார்கோ, அக்டோபர் 10 ஆம் தேதி பாகிஸ்தானில் இருந்து ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: மாணவர்களின் ரூ. 1.9 கோடி திருட்டு!

மேற்கு வங்கத்தில் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 1.9 கோடி திருடப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.மேற்கு வங்கத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இடையேயான டிஜிட்டல் இடைவெளியைக் குற... மேலும் பார்க்க

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு 15 மின் இரு சக்கர வாகனங்கள் நன்கொடை

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஹதராபாத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வர பக்தர் ஒருவர், 15 மின் இருசக்கர வாகனங்களை வெள்ளிக்கிழமை நன்கொடையாக வழங்கினார்.அப்போது வாகனங்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் திர... மேலும் பார்க்க

தொலைக்காட்சி தொடர்களை பிரசாரத்திற்கு பயன்படுத்துகிறார் ஏக்நாத் ஷிண்டே: காங்கிரஸ் குற்றச்சாட்டு

மராத்தி தொலைக்காட்சி தொடர்களை பிரசாரத்திற்கு ஷிண்டே தலைமையிலான சிவசேனை பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து மாநில காங்கிரஸ் பொதுச் செயலர் சச்சி... மேலும் பார்க்க

பிரதமர் மோடி பயணித்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

புது தில்லி: ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி பயணித்த சிறிய ரக விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி பயணித்த சிறிய ரக விமானத்தில் ஏற்பட்ட தொழில்... மேலும் பார்க்க

மண்டல பூகைக்காக சபரிமலை நடைதிறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக இன்று மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. நாளை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.கேரளத்தின் பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதந்தோறு... மேலும் பார்க்க