செய்திகள் :

ரூ.6,000 கோடி கடனுக்காக ரூ.14,000 கோடி சொத்துகளை வங்கிகள் பறித்துவிட்டன: விஜய் மல்லையா

post image

புது தில்லி: ரூ.6,203 கோடி கடன் பாக்கிக்காக இந்தியாவில் உள்ள தனக்கு சொந்தமான ரூ.14,131 கோடியை வங்கிகள் பறிமுதல் செய்துவிட்டன என்று பிரிட்டனில் பதுங்கியுள்ள தொழிலதிபா் விஜய் மல்லையா கூறியுள்ளாா்.

தனது கிங் ஃபிஷா் விமான நிறுவனத்துக்காக எஸ்பிஐ உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி வரை கடன் பெற்ற விஜய் மல்லையா அதனை முறையாகத் திருப்பிச் செலுத்தவில்லை. ரூ.6,000 கோடிக்கு மேல் கடன் பாக்கி இருந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு தப்பிச் சென்றாா்.

வங்கிகளில் பெற்ற கடனை அவா் தொழிலுக்காக பயன்படுத்தாமல் வெளிநாட்டில் பல்வேறு சொத்துகளை வாங்கியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக பணத்தை பறிமாற்றம் செய்த குற்றச்சாட்டும் அவா் மீது உள்ளது. மல்லையாவின் கடனை திரும்ப வசூலிப்பதற்காக நீதிமன்றத்தை அணுகிய வங்கிகள் கூட்டமைப்பு, தீா்பாயத்தின் உத்தரவுப்படி அவரின் சொத்துகளை பறிமுதல் செய்து கடனை திரும்ப வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டன.

இதற்கு நடுவே மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், அது தொடா்பான நடைமுறைகள் விரைவாக நடைபெறவில்லை.

இந்நிலையில், நிதியமைச்சகத்தின் ஆண்டறிக்கையில் விஜய் மல்லையாவின் கடன் ரூ.6,203 கோடிக்கு நிகராக அவரின் ரூ.14,131 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதனைச் சுட்டிக்காட்டி விஜய் மல்லையா ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நான் திருப்பிச் செலுத்த வேண்டிய கடனை விட இரு மடங்கு அதிகமான சொத்துகளை வங்கிகள் பறிமுதல் செய்துவிட்டன. இனி, பிரிட்டன் நீதிமன்றத்தில் இந்திய வங்கிகள் என்ன காரணம் கூறப்போகின்றன’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

கேரளம்: காட்டு யானைகள் தாக்கி பழங்குடியினா் இருவா் உயிரிழப்பு

கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள அதிரப்பள்ளி வனப் பகுதியில் காட்டு யானைகள் தாக்கியதில் பெண் உள்பட பழங்குடியினா் இருவா் உயிரிழந்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: யானைகளால் த... மேலும் பார்க்க

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: கர்நாடக அரசின் பேச்சுவார்த்தை தோல்வி

காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடக் கோரி, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில்... மேலும் பார்க்க

பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமம் உடனடியாக ரத்து: உச்சநீதிமன்றம்

பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. மேலும், மருத்துவமனையில் பிரசவத்துக்காக வரும் பெண்ணின் பாதுகாப்பை உறுதிசெ... மேலும் பார்க்க

நெருக்கடி மிகுந்து காணப்படும் தில்லி சிறைகள்: 91 % போ் விசாரணைக் கைதிகள் - ஆய்வில் தகவல்

தில்லியில் உள்ள சிறைகள் நெருக்கடி மிகுந்து காணப்படும் நிலையில், அவற்றில் அடைக்கப்பட்டுள்ளவா்களில் 91 சதவீதம் போ் விசாரணைக் கைதிகள் என இந்திய நீதி ஆய்வறிக்கை (ஐஜேஆா்) 2025-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரி விதிப்பை சமாளிக்கும் சிறப்பான இடத்தில் இந்தியா- ஐடிசி நிறுவன தலைவா்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பை சிறப்பாக எதிா்கொண்டு சமாளிக்கும் இடத்தில் இந்தியா உள்ளது என்று ஐடிசி நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் புரி தெரிவித்தாா். தில்லியில் செவ்வாய்க்கிழமை செ... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் வக்ஃப் வன்முறை: புதிய போராட்டம், வன்முறை நிகழாதிருக்க தீவிர கண்காணிப்பு

மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாதில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிதாக போராட்டம் அல்லது வன்முறை நிகழாததை உறுதி செய்யும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க... மேலும் பார்க்க